ETV Bharat / sports

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் இடம் பெறுவாரா? - ரவிச்சந்திர அஸ்வின்

ICC World cup cricket 2023: நாளை நடைபெறவுள்ள இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான ஆட்டத்தில் அஸ்வின் இடம் பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.

cricket-world-cup-2023-ashwin-dilemma-a-possible-headache-for-men-in-blue
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறுவார?
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 10:23 AM IST

டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரின் 5வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற, இந்திய அணி நாளை (அக்-11) டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இதில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் ஷர்மாவிற்கு கடினமான பணி என்னவென்றால், வரவிருக்கும் போட்டிகளில் பிளேயிங் லெவன் அணியைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல்கள் உள்ளது. ஏனென்றால் குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தொடர்ந்து ஆடி வரும் நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வினின் ரோல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் 3 சுழற்பந்து வீச்சாளர்களிடம் களமிறங்கியது. மூவரும் ஆஸ்திரேலிய அணியின் ரன்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டனர். ரவிச்சந்திரன் அஷ்வின் (10 ஓவர்களில் 1-34), குல்தீப் யாதவ் (2-42) மற்றும் சுழல் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (3-28) ஆகியோர் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருப்பினும் சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானம் ஆகும். வரும் காலங்களில் அதற்கான வாய்ப்பு குறைவு என்கிறார்கள், கிரிக்கெட் வல்லுநர்கள். அதுமட்டுமல்லாமல், இந்திய அணி நாளை (அக்-11) டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்தியாவின் மற்ற மைதானங்களை ஒப்பிடும்போது டெல்லி மைதானத்தில் பவுண்டரி தூரம் மிகவும் குறைந்ததாகும்.

இந்த மைதானத்தில் அதிக ரன்கள் அடித்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பை பெற முடியும் என்பதால், ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறுவார என்பது கேள்விக்குறியான ஒன்றுதான். அவருக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் இடம் பெறலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது. அதேபோல் முகமது ஷமி மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆடுகளத்தில் ஸ்பின்னர்களை விடவும் வேகப்பந்துவீச்சாளர்களை உகந்தாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் முகமது ஷமியும் இடம் பெறுவதற்கான வாய்புகள் அதிகமாகவுள்ளது.

இரண்டாவதாக, லெவன் அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றால், ரவீந்திர ஜடேஜா பேட்டிங் பவுலிங் இரண்டிலும் சிறந்து விளங்குவதால் பிளேயிங் லெவனில் கட்டாயம் இடம் பெறுவார். சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஏதுவான மைதானம் என்பதால் மட்டுமே இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றார்கள்.

வரவிருக்கும் போட்டிகளில் இதே போன்று மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி செல்கிறதா அல்லது ஒரு சுழற்பந்து வீச்சாளர் இடத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளரைக் கொண்டு வருமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: England Vs Bangladesh : முதல் வெற்றியை பெறுமா இங்கிலாந்து? தாக்குபிடிக்குமா வங்கதேசம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.