ETV Bharat / sports

எனக்கும் ரோஹித்துக்கும் எந்த மோதலும் கிடையாது - விராட் கோலி விளக்கம் - கேப்டன் பதவி குறித்து விராட் கோலி

கேப்டன் பதவி தொடர்பாக தனக்கும் ரோஹித் சர்மா தொடர்பாக எந்தவித பூசலும் இல்லை என விராட் கோலி விளக்மளித்துள்ளார்.

விராட் கோலி
விராட் கோலி
author img

By

Published : Dec 15, 2021, 4:02 PM IST

கேப்டன்சி தொடர்பாக இந்திய அணியில் எழுந்துள்ள புகைச்சல் குறித்து டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று மனம் திறந்துள்ளார். இன்று அவர் அளித்த பேட்டியில் அணியின் தேர்வு குழு நடவடிக்கை குறித்து பேசியுள்ளார்.

அதில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தேர்வு குழு கூட்டம் தொடர்பாக என்னிடம் உரியமுறையில் தகவல் தெரிவிக்கவில்லை. கூட்டத்திற்கு ஒன்றரை மணிநேரம் முன்னதாகவே எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தேர்வுக்குழு கூட்டத்தில் அணி குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. உரையாடலின் இறுதியில் நான் ஒருநாள் கேப்டன் பதவியில் நீட்டிக்க முடியாது என தேர்வு குழு முடிவெடுத்துள்ளாதாக தெரிவித்தனர். நான் அதற்கு சரி என்று பதிலளித்தேன் என்றார்.

தனக்கும் ரோஹித் சர்மாவுக்கும் எந்த பூசலும் இல்லை என்ற கோலி, வரப்போகும் ஒருநாள் போட்டிகளில் விளையாட தயாராகவுள்ளேன் எனவும் கூறினார்.

இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்தவர் கோலி. அன்மையில் நடந்துமுடிந்த டி20 உலகக்கோப்பைக்குப் பின் அவர் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், டி20க்கு ரோஹித் சர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிக்களுக்கு அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு கூடியது. அப்போது, ஒருநாள் போட்டியில் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலியை நீக்கி ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிப்பதாக கூறியது.

எனவே டெஸ்ட் அணிக்கு மட்டுமே கோலி கேப்டன் என்ற நிலையில், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விலகுவதாக ரோஹித் சர்மா தெரிவித்தார். பதிலுக்கு கோலியும் ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என பேச்சு அடிபட்டது. தற்போது, இவ்விவகாரம் தொடர்பாக கோலி விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவில் Netflix சந்தா விலை 60 விழுக்காடு குறைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.