தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல் ரவுண்டர், அல்பி மோர்கல். வலது கையில் மிதவேகமாகப் பந்துவீசுவதிலும், இடதுகை மட்டையாளருமாக செயல்படுவதிலும் வல்லவராகத் திகழ்ந்த இவர் 58 ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி ஆல்ரவுண்டராகப் புகழ்பெற்றவர்.
நியூசிலாந்துக்கு எதிராக இவர் விளையாடிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 48 ரன்களைக் கொடுத்து, அதிரடியாக 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களின் லைம்லைட்டில் இடம்பிடித்தார், அல்பி
நெடுநாள் காதலியை மணந்த மோர்கல்:
1981ஆம் ஆண்டு ஜுன் 10ஆம் தேதி, ஆல்பர்ட், மரியானா மோர்கல் தம்பதிக்கு 2ஆவது மகனாகப் பிறந்தவர், அல்பி மோர்கல். இவரது அண்ணன் மலனும், இவரது இளைய சகோதர் மோர்னே மோர்கலும் கிரிக்கெட்டர்கள். அல்பி மோர்கல், தனது குழந்தைப்பருவ கிரஷ்ஷான மர்த்மரியைத் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு ஏஜே என்னும் ஆல்பர்டஸ் ஜோஹன்னஸ் என்னும் மகனும், காரா மோர்கல் என்னும் மகளும் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியப்புள்ளி:
ஐபிஎல்லில் முதல் முதல் இவர் சிஎஸ்கே அணியில் ஆல்ரவுண்டராக களமிறங்கி, அணியின் வெற்றிக்கு மிக முக்கியப் பங்கு வகித்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியில் முரளிவிஜயுடன் இணைந்து மூன்றாவது இணையாக களமிறங்கி, அதிரடியாக விளையாடி அதிக ரன்களை எடுத்து சாதனைப் படைத்தார்.
அதேபோல் 2012 ஐபிஎல் தொடரின்போது, சூப்பர் சிக்ஸில் 105 மீட்டர் உயரத்தில் இவர் அடித்த சிக்ஸை யாரும் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இதுவரை 91 போட்டிகளில் விளையாடியுள்ள அல்பி மோர்கல் 974 ரன்களையும், 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் பட்டியலிலும் இவர் இதுவரை மூன்றாமிடத்தில் நீடித்துவருகிறார்.
சிஎஸ்கே வெற்றிக்கு தோனிதான் காரணம்:
ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிய பின் ஒருமுறை செய்தியாளர்களைச் சந்தித்த மோர்கல், 'சிஎஸ்கே அணியின் வெற்றிக்குக் காரணம் அணியின் கேப்டன் தோனிதான். ஏனெனில் டி20, ஒருநாள் போட்டிகளில் அவரைப் போன்ற ஒரு வீரர், கேப்டன் கிடைப்பது சாத்தியமில்லை.
ஒரு கேப்டனாக வீரர்களின் திறமையைக் கண்டறிந்து, அவற்றிற்கு ஏற்றவாறு பயன்படுத்துவது அவருடைய தனித்திறமை.மேலும் சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை முக்கிய வீரர்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் அணியுடனே வைத்துக் கொள்வது அவரின் ஒரு மந்திரமாகவே கருதப்படுகிறது.
பத்து தொடர்களில் எட்டு முறை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்ல முடியுமானால் அது தோனியால் மட்டுமே முடியும். அதனால்தான் கூறினேன் சென்னை அணியின் வெற்றிக்குக் காரணம் தோனி மட்டுமே.
மேலும், நான் சிஸ்கே அணிக்காகச் சில ஆண்டுகள் விளையாடிவுள்ளேன். பின்னர் எனது ஃபார்ம் சரியில்லை என்று தெரிந்தவுடன், கிரிக்கெட்டிலிருந்து விலகி எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டேன்" என்று தெரிவித்தார்.
அந்தளவு தோனி மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கும் அல்பி மோர்கலுக்கு இன்று பிறந்தநாள். தோனியின் தளபதிக்கு பக்தனுக்கு வாழ்த்துகள்
இதையும் படிங்க: ஜான்டி ரோட்ஸ், அல்பி மோர்கல் அதிரடியில் தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் வெற்றி!