ETV Bharat / sports

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கால்கள் செயலிழப்பு - நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்

உயிர் காக்கும் அறுவை சிகிச்சையின் பக்கவிளைவாக, நியூசிலாந்து கிரிக்கெட் மூத்த வீரர் கிறிஸ் கெயின்ஸின் கால்கள் முடக்கவாதத்தால் செயலிழந்துள்ளன.

கிறிஸ் கெயின்ஸ்
கிறிஸ் கெயின்ஸ்
author img

By

Published : Aug 28, 2021, 10:29 AM IST

கான்பரா: நியூசிலாந்து அணியின் மூத்த ஆல்ரவுண்டரான கிறிஸ் கெயின்ஸ் (51) இதயப் பிரச்சினை (அதீத துடிப்பு) காரணமாக இந்த மாத தொடக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் ஆகஸ்ட் 10ஆம் தேதி உயர் சிகிச்சைக்காக சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மேலும், அங்கு அவருக்கு உயிர் காக்கும் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையினால், அவருக்கு முதுகெலும்பில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், தற்போது அவரின் கால்கள் முடக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

கால்கள் செயலிழப்பு

இந்நிலையில், அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவ வல்லுநர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்றுவருவதாக அவரது வழக்கறிஞர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கடினமான காலத்தில் பொதுமக்கள் துணையாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கிறிஸின் குடும்பத்தினர் தெரிவித்ததாக அவர் கூறினார். கிறிஸ், அவரின் குடும்பத்தினர் தற்போது ஒன்றாக நேரத்தைச் செலவழித்து வருவதாகவும் கூறினார்.

நியூசிலாந்து அணிக்காக 1989ஆம் ஆண்டுமுதல் 2006ஆம் ஆண்டுவரை விளையாடிய கிறிஸ் கெயின்ஸ், மொத்தம் 62 டெஸ்ட் போட்டிகள், 215 ஒருநாள் போட்டிகள், இரண்டு டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 3,320 ரன்களைச் சேர்த்து, 218 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் அரங்கில், 4,950 ரன்களைச் சேர்த்துள்ள அவர் 201 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பல சூதாட்ட சர்ச்சைகளில் சிக்கிய கெயின்ஸ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, லாரி பணிமனைகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜுவென்டஸ் அணியில் இருந்து விலகுகிறார் ரொனால்டோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.