ரஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ரஞ்சியில் பிசிசிஐயின் முன்னாள் செயலாளரும், ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான அமிதாப் சவுத்ரி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58. அவர் ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க தலைவராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். அப்போதுதான் ரஞ்சியில் சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கான மைதானம் கட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2005ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணிக்கு மேலாளராக இருந்தார். அதன்பின் 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பிசிசிசியின் செயலாளராக பணியாற்றினார். இவரது மறைவிற்கு கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "முன்னாள் ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க தலைவர் அமிதாப் சவுத்ரியின் மறைவு செய்தி ஆழ்ந்த வருத்தத்தை கொடுக்கிறது. அமிதாப் ஜி மாநிலத்தில் கிரிக்கெட் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கினை வகித்தார். இந்த நேரத்தில் அவரது ஆன்மா சாந்தியடையட வேண்டுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜிம்பாப்வே தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்