ETV Bharat / sports

ICC World Cup 2023: உலக கோப்பை கிரிக்கெட்டில் விதிமுறைகள் மாற்றமா? அப்படி என்ன மாறி இருக்கு தெரியுமா? - உலக கோப்பை கிரிக்கெட் 2023

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் விதிமுறைகளில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

icc
icc
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 7:03 PM IST

Updated : Oct 5, 2023, 11:21 AM IST

கொல்கத்தா : கடந்த 2021ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் பவுண்டரி எண்ணிக்கைகள் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற்றது அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாமல் இருக்க சூப்பர் ஓவர் உள்ளிட்ட விதிமுறைகளில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து உள்ளது.

13வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரோலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடுகின்றன. இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் சுற்று ஆட்டங்களும் அதில் வெற்றி பெற்றும் புள்ளி பட்டியலில் முதன்மை பெறும் அணிகள் நாக் அவுட் சுற்றுகளுக்கும் தகுதி பெறும்.

முதல் முறையாக இந்தியாவில் மட்டும் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என்பதால் தரமான சம்பவங்களுக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் முதலாவது லீக் ஆட்டம் நடைபெறுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான இறுதிப் போட்டியின் முடிவு பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆட்டம் சமனில் முடிவடைந்ததை அடுத்து நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் சமனில் முடிவடைந்ததால் அதிக பவுண்டரிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உலக கோப்பை வழங்கப்பட்டது.

இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடப்பு உலக கோப்பை தொடரில் அது போன்ற சிக்கல்களை தவிர்க்க புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆட்டத்தில் முடிவு எட்டும் வரை சூப்பர் ஓவர் முறை நடைமுறைப்படுத்தப்படும் என ஐசிசி வெளியிட்டு உள்ள விதிமுறைகள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் டையில் முடியும் பட்சத்தில் மட்டும் இந்த சூப்பர் ஓவர் விதிமுறை நடைமுறைப்படுத்தப்படும் என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்றபடி லீக் மற்றும் தகுதிச் சுற்றுகளில் சூப்பர் ஓவர் நடைமுறை கடைபிடிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : World Cup Cricket 2023: நாக் அவுட் சுற்றில் தடுமாற்றம்.. அவசரமா? பதற்றமா?! தொடரும் சஞ்சு சாம்சன் சர்ச்சை! - சடகோபன் ரமேஷ் கூறுவது என்ன?

Last Updated : Oct 5, 2023, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.