ETV Bharat / sports

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்! - சச்சின் டெண்டுல்கர்

Heath Streak Passed away: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

ex zimbabwe cricket team captain heath streak dies at 49
Heath Streak
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 7:54 PM IST

ஹராரே: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஹீத் ஸ்ட்ரீக் (49) புற்றுநோய் பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். 1990 முதல் 2005 வரை ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய இவர் தலைசிறந்த பந்து வீச்சாளராகத் திகழ்ந்துள்ளார். ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாவே அணிக்காக 65 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 189 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாவே அணியின் பிரபலமான வேகப்பந்து வீச்சாளராக அறியப்பட்டாலும், அவர் மிடில் ஆர்டரில் களம் இறங்கி பேட்டிங்கிலும் கலக்கி உள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 1,990 ரன்களும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2 ஆயிரத்து 942 ரன்களும் அடித்து உள்ளார்.

இதையும் படிங்க: IND VS PAK: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து... இந்தியாவின் நிலை என்ன?

ஆல்ரவுண்டரான இவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 216 விக்கெட்களையும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 239 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இவர் கடைசியாக 2005ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பின் ஓய்வை அறிவித்தார்.

மேலும், இவர் ஜிம்பாப்வே, வங்கதேசம், ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணிக்கும், ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் லயன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிக்கும் பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நடசத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

  • Deeply pained to learn of Heath Streak's demise. While he was a big, muscular & strong guy, his agility and deceptive bowling, combined with his fielding prowess, were truly remarkable. The cricketing fraternity will feel his absence. Rest in peace, Heath. pic.twitter.com/gbD43rTz5K

    — Sachin Tendulkar (@sachin_rt) September 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சச்சின் டெண்டுல்கர் அவரது X சமூக வளைதள பக்கத்தில், “ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவர் வலிமையானவராக இருந்தபோது, அவரது சுறுசுறுப்பு, பந்துவீச்சு மற்ரும் அவரது பீல்டிங் திறமை ஆகியவை உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை. அவர் இல்லாததை கிரிக்கெட் வட்டாரம் உணரும்” என இரங்கல் செய்தி பதிவிட்டு உள்ளார்.

மேலும் ஹீத் ஸ்ட்ரீக்கின் இறப்பிற்கு கிரிக்கெட் வீரர்கள் சோயிப் அக்தர், வீரேந்திர சேவாக், விவிஎஸ் லட்சுமணன், வாசிம் அக்ரம், யுவராஜ் சிங் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: BAN Vs AFG: ஆப்கானிஸ்தானுக்கு ஏதிரான ஆட்டத்தில் வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.