நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட போட்டியில், இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பவுண்ட்ரி லைனில் (எல்லைக் கோட்டில்) பிடித்த கேட்ச் இணையளத்தில் வைரலாகிவருகிறது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி ஐந்து ஒருநாள் , மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த போது இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் சிறப்பான கேட்ச்சை பிடித்து அனைவரையும் மிரட்டினார்.
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா வீசிய ஆட்டத்தின் 15வது ஓவரின் இறுதிப் பந்தை நியூசிலாந்து வீரர் மிட்சல் தூக்கி அடித்தார். பந்து லாங் ஆன் திசையோ நோக்கி சிக்சருக்கு சென்றப் போது, அங்கு ஃபில்டிங் செய்துக் கொண்டிருந்த இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் எல்லைக் கோட்டின் அருகே கேட்ச் பிடித்தார்.
பந்தை பிடித்த வேகத்தில் பின்னாடி சென்ற அவர், எல்லைக் கோட்டை நெருங்கப் போகிறோம் என தெரிந்துக் கொண்டதால் எல்லைக் கோட்டை தாண்டுவதற்கு முன் பந்தை சற்று உயரத்தில் தூக்கி எறிந்தார்.
What A Catch!. 🔥 DK (Dinesh Karthik) @DineshKarthik 😍😘 #NZvIND pic.twitter.com/sF5YFCfjHi
— Brijesh sukla (@SuklaBrijesh) February 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What A Catch!. 🔥 DK (Dinesh Karthik) @DineshKarthik 😍😘 #NZvIND pic.twitter.com/sF5YFCfjHi
— Brijesh sukla (@SuklaBrijesh) February 6, 2019What A Catch!. 🔥 DK (Dinesh Karthik) @DineshKarthik 😍😘 #NZvIND pic.twitter.com/sF5YFCfjHi
— Brijesh sukla (@SuklaBrijesh) February 6, 2019
இந்த கேட்ச்சை பிடிப்பதற்கு முன், இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தின் 11வது ஓவரில் நியூசிலாந்து வீரர் டிம் செய்பெர்ட் கொடுத்த கேட்ச்சை தவறிவிட்டார்.
இதன் மூலம், தினேஷ் கார்த்திக் முதலில் தான் செய்த தவறை பின் அசத்தலான கேட்ச்சை பிடித்து சரிசெய்துக் கொண்டார்.
தற்போது, டைவிங்கில் பறந்து இவர் பிடித்த கேட்ச் இணையளத்தில் வைரலாகிவருகிறது.