12-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது. இந்த இரு அணிகள் மோதும் போட்டி என்றால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இந்நிலையில் தொடரின் முதல் போட்டியை சென்னையின் கோட்டையில் விளையாடவுள்ளதால் இப்போட்டியை அனைவர் மத்தியிலும் பலமடங்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சென்னை-பெங்களூரு அணிகள் இதுவரை மோதிய 23 போட்டிகளில் சென்னை அணி 15-லும், பெங்களூரு அணி 7 பொட்டிகளிலும் வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. அதிகபட்சமாக பெங்களூரு அணி கேப்டன் கோலி 732 ரன்களும், சென்னை அணி கேப்டன் தோனி 710 ரன்களும் எடுத்துள்ளனர்.
இந்த வருடத்தில் இவ்விரு அணிகள் குறித்து பார்த்தோமானால், ஆர்சிபி அணியில் திறமையான வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. அதில் ஹெட்மயர், கிளாஸன், சிவம் துபே, மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் அணிக்குள் வந்துள்ளதால் ஆர்சிபி அணியின் பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
சென்னை அணியைப் பொறுத்தவரையில், மோஹித் சர்மா, கெய்க்வாட்ஆகியோர் மட்டுமே இணைந்துள்ளனர். தோனி - கோலி இணைந்து நடித்த வீடியோவால் ஒவ்வொரு வருடமும் சென்னை-பெங்களூரு அணிகளுக்கிடையேயான ரிவல்ரி போர், இந்த வருடம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.