அகமதாபாத்: கோலியை பார்க்கும் ஆர்வத்தில் மைதானத்துக்குள் ரசிகர்கள் ஒருவர் இறங்கியுள்ளார். அவரை பார்த்தவுடன் அங்கிருந்து திரும்பி போகுமாறு கோலியே சொன்னதையடுத்து அந்த ரசிகர் திரும்பிச் சென்றார்.
மொட்டேரா மைதானத்தில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்ட் போட்டியை காண 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று (பிப். 24) நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தின் இடையே ரசிகர் ஒருவர் கோலியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி மைதானத்தினுள் இறங்கியுள்ளார்.
-
Fan breached the security. Virat Kohli moves away, fan goes back! pic.twitter.com/6RHj3GuwFu
— Cheeru (@_sobermonk) February 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Fan breached the security. Virat Kohli moves away, fan goes back! pic.twitter.com/6RHj3GuwFu
— Cheeru (@_sobermonk) February 24, 2021Fan breached the security. Virat Kohli moves away, fan goes back! pic.twitter.com/6RHj3GuwFu
— Cheeru (@_sobermonk) February 24, 2021
இதைக் கண்ட கோலி, அந்த ரசிகரை திரும்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். கோலியின் செய்கையை கவனித்த பார்வையாளர்கள் ஆரவாரம் செய்ய, தன் தவறை உணர்ந்து அந்த ரசிகர் அங்கிருந்து திரும்பிச் சென்றார்.
-
Fan breaches security to meet Virat Kohli#INDvsENG pic.twitter.com/qCF7QQn2hj
— Trollmama_ (@Trollmama3) February 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Fan breaches security to meet Virat Kohli#INDvsENG pic.twitter.com/qCF7QQn2hj
— Trollmama_ (@Trollmama3) February 24, 2021Fan breaches security to meet Virat Kohli#INDvsENG pic.twitter.com/qCF7QQn2hj
— Trollmama_ (@Trollmama3) February 24, 2021
இதுதொடர்பாக குஜராத் கிரிக்கெட் வாரியம் கூறும்போது, மைதானத்துகுள் நுழைந்த ரசிகர் யார் என்பதை தேடி வருகிறோம். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அனைவரின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தனர்.
பாதுகாப்பு நெறிமுறைகளில் பிசிசிஐ தற்போது கூடுதல் கண்டிப்புடன் செயல்பட்டுவருகிறது. வீரர்கள், போட்டி அலுவலர்கள் என அனைவரும் தனிப்பட்ட முறையில் யாரையும் சந்திக்க கூடாது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பயிற்சியின்போதும் இது கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும் இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்பாராத விதமாக நடைபெறுகிறது.
முன்னதாக, சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடைவெளி நேரத்தில், பள்ளி மாணவர் ஒருவர் தடைகளை தாண்டி மைதானத்துக்குள்ளே நுழைந்தார். இதுதொடர்பான வீடியோவும் வெளியானது.
இதைத்தொடர்ந்து தற்போது மொட்டேராவில் நடைபெற்று வரும் பகல் இரவு ஆட்டத்தில் இதுபோன்றதொரு நிகழ்வு நடந்துள்ளது.
இதையும் படிங்க: ஜாகீர் கானை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்!