சென்னை: இந்திய- இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் 100ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த 9ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது 20ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட். இந்தியாவுக்கு எதிரான இந்தச் சதத்துக்கு முன்பு, இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அந்த அணிக்கு எதிராக இரண்டு சதங்களை விளாசினார் ரூட்.
அந்த வரிசையில் இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சதம், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் என அடுத்தடுத்து மூன்று சதங்களை அடித்துள்ளார். இன்று தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ள அவர், சதம் எடுத்திருப்பதன் மூலம் நூறாவது போட்டியில் சதமடித்த 10ஆவது வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் முதல் மற்றும் 100ஆவது டெஸ்ட் ஒரே அணிக்கு எதிராக விளையாடும் மூன்றாவது வீரர் என்று பெருமையையும் பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக அறிமுக வீரராக களமிறங்கினார் ரூட். அந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கபில் தேவ் (பாகிஸ்தானுக்கு எதிராக), வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் பேட்ஸ்மேன் கார்ல் கூப்பர் (இந்தியாவுக்கு எதிராக) ஆகியோர் ஒரே அணிக்கு எதிராக முதல் மற்றும் நூறாவது போட்டியில் விளையாடியுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிராக 17 ஆட்டங்கள் விளையாடியுள்ள ரூட், 5 முறை சதமடித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் தனது சதத்தின் மூலம் இங்கிலாந்து அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
முன்னாள் வீரர்களான கோலின் கெளட்ரே, ஜாவித் மியாண்டட், கோர்டன் கிரீன்ட்ஜ், அலேக் ஸ்டீவார்ட், இன்சமாம்-உல்-ஹக், ரிக்கி பாண்டிங், கிரீம் ஸ்மித், ஹாசீம் ஆம்லா ஆகியோர் தங்களது 100ஆவது போட்டியில் சதமடித்துள்ளனர். இதில் ரிக்கி பாண்டிங் மட்டும் தனது நூறாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்துள்ளார்.
இதையும் படிங்க: IND vs ENG: நிதான ஆட்டம் - முதல் நாள் முடிவில் வலுவான நிலையில் இங்கிலாந்து