ETV Bharat / sports

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி!

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

India, England Test series
India, England Test series
author img

By

Published : Jul 6, 2021, 6:42 AM IST

லண்டன் : இந்திய அணி லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

முன்னதாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டு விளையாடியது. கடந்த மாதம் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் குறிப்பிட்ட அளவு ரசிகர்களுக்கு மட்டும் போட்டியை நேரில் காண அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியினர் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட அடுத்த வாரம் பயிற்சியை தொடங்குகின்றனர். போட்டிகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குகின்றன. அப்போது ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக திங்கள்கிழமை (ஜூலை 5) இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்தில் கோவிட் பொதுமுடக்கம் நீக்கப்படுவதாக உத்தரவிட்டார். தொடர்ந்து, இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : இஷாந்த் சர்மாவுக்கு கையில் காயம்...இங்கிலாந்து டெஸ்டில் விளையாடுவாரா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.