ETV Bharat / sports

IND vs ENG சீரிஸ் டிசைடர்: தோல்வியின் விளிம்பில் இங்கிலாந்து! - IND vs ENG சீரிஸ் டிசைடர்: இரண்டாவது இன்னிங்ஸ் 11 ஓவர்களில் 68/3

இங்கிலாந்து 28 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்துள்ளது. மொயின் அலி 20 (16) ரன்களோடும், சாம் கரன் 2 (4) ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

Breakthrough for India, England lost 1 wicket for 14 runs

author img

By

Published : Mar 28, 2021, 6:59 PM IST

Updated : Mar 28, 2021, 8:38 PM IST

புனே: இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 329 ரன்கள் அடித்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்ட வேண்டும் என்ற முனைப்பில் இறங்கிய ராய், புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரின், முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். நான்காவது பந்தில் இரண்டு ரன்களும், மீண்டும் பவுண்டரியும் என விளாசி 5 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் தனது அசத்தலான இன்-ஸ்விங்கர் மூலம் ராயின் ஸ்டெம்புகளை புவனேஷ்வர் சிதறடித்தார். ராய் 14 (6) ரன்னில் நடையைக் கட்டினார்.

இரண்டாவது ஓவரை வீசிய நடராஜன், தனது லைனை சீர்படுத்தத் தவறியதால், இரண்டு வைடுகள் உள்பட 8 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

மூன்றாவது ஓவரில் நான்காம் பந்தில் ஸ்டோக்ஸ் பவுண்டரி அடித்தாலும், ஆறாவது பந்தில் தனது ஸ்லோ-பேஸ் (slow pace) பந்தின் மூலம் பேர்ஸ்டோவை வீழ்த்தினார்.

ஸ்டோக்சும், மாலனும் நிதானமாக ஆடிக்கொண்டிருக்க, புவனேஷ்வர் வீசிய ஐந்தாவது ஓவர் நான்காம் பந்தில் ஸ்டோக்ஸ் கொடுத்த கேட்ச்சை ஹர்திக் பாண்டியா தவறவிட்டார். அப்போது ஸ்டோக்ஸ் 15 ரன்களே எடுத்திருந்தார்.

நடராஜன் வீசிய 11 ஓவரில் ஸ்டோக்ஸ் 35 (39) ரன்களில் தவானிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பின், சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேப்டன் பட்லரும் தாக்கூர் வேகத்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

கடந்த போட்டியில் அறிமுகமான லிவிங்ஸ்டனும் மாலனுக்குப் பக்கபலமாக ஆடினார். 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த இணையை தாக்கூர் தகர்த்தார். லிவிங்ஸ்டன் 36(31) ரன்களில் நடையைக்கட்ட ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

மாலன் 48 பந்துகளில் தனது அரை சதத்தைக் கடக்க, அதற்கடுத்த இரண்டாவது பந்திலேயே தாக்கூரிடம் வீழ்ந்தார்.

ஆல்-ரவுண்டர்களான மொயின் அலியும், சாம் கரனும் வெற்றிக்குப் போராடி வந்தனர். ஆனால், புவனேஸ்வர் பந்தில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து, மொயின் அலி பெவிலியன் திரும்பினார்.

இங்கிலாந்து 31 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. சாம் கரன் 9 (10) ரன்களோடும் அதில் ரஷித் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணியில் சர்தூல் தாக்கூர் 6 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 6 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், நடராஜன் 6 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

Last Updated : Mar 28, 2021, 8:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.