ETV Bharat / sports

மூன்றாவது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, மீண்டும் கடந்த இரண்டுபோட்டிகளைப்போல், முதலில் இந்தியாவை பேட்டிங் செய்யப் பணித்துள்ளது.

india vs England toss
india vs England toss
author img

By

Published : Mar 28, 2021, 1:23 PM IST

புனே: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று, தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளன.

இந்நிலையில், புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (மார்ச் 28) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தரப்பில் , டாம் கரன் நீக்கப்பட்டு மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கத்திற்கு மாறாக, இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, ரிஷப் பந்த், புவனேஷ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், நடராஜன்

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, சாம் கரன், மார்க் வுட், அதில் ரஷித், ரீஸ் டோப்லி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.