ETV Bharat / sports

England Vs Netherland : புள்ளி பட்டியலில் கடைசி இடம் யாருக்கு?.. இங்கிலாந்து - நெதர்லாந்து மோதல்! - உலக கோப்பை கிரிக்கெட் 2023

World Cup Cricket 2023 : நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை (நவ. 8) புனேவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

England Vs Netherland
England Vs Netherland
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 2:16 PM IST

புனே : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.

லீக் சுற்று ஆட்டங்களில் உச்சக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் போராடி வருகின்றன. இதில் விதிவிலக்காக இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் நடப்பு சீசன் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நாளை (நவ. 8) நடைபெறும் 40வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு உலக கோப்பை கிர்க்கெட் தொடரில் இருந்து இவ்விரு அணிகளும் வெளியேறிவிட்டாலும் கடைசி இடத்தை பிடிப்பது யார் என்ற போட்டி இவ்விரு அணிகளிடையே நடைபெறுகிறது என்றும் கூட கூறலாம்.

நடப்பு உலக சாம்பியனான இங்கிலாந்து அணி வரலாறு கண்டிராத அளவில், நடப்பு சீசனில் படுமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடி 7 ஆட்டங்களில் வங்கதேசத்திற்கு எதிரான அட்டத்தை தவிர்த்து அனைத்து போட்டிகளிலும் தோல்வியையே தழுவி உள்ளது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து அணியில் தொடக்கம் மற்றும் மிடில் ஆர்டர் வரிசை மிக மோசமாக இருப்பதே தொடர் தோல்விக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான் ஆகியோர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதேபோல் கடந்த வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் நன்றாக விளையாடிய ஜோ ரூட் அதன்பின் எந்த போட்டியிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

அதேபோல் அதிரடி ஆட்டக்காரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் பெரிய அளவில் தங்களது திறனை வெளிக் கொணராதது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெருமைக்காகவாது வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.

பந்துவீச்சை பொறுத்தவரை கிறிஸ் வோக்ஸ், அடில் ரசீத் உள்ளிட்டோர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் கத்துக்குட்டி அணிகளின் ஆட்டம் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது.

அப்படி எடுத்துக் கொள்ளுகையில், நெதர்லாந்து அணியும், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி அதிர்ச்சி அளித்தது. அதேபோல், இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க நெதர்லாந்து வீரர்கள் முயற்சிப்பார்கள்.

ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணிக்கு நடப்பு சீசன் உலக கோப்பை கிரிக்கெட் சிறப்பானதாக அமைந்தது. அதே உத்வேகத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்த நெதர்லாந்து வீரர்கள் முயற்சிப்பார்கள். வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையும் படிங்க : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் - ஆப்கானிஸ்தான் தகுதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.