அடிலெய்டு: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து இன்று (நவம்பர் 10) இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான 2ஆவது அரையிறுதிப்போட்டி அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிங்கிய இந்திய வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தனர். அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 33 பந்துகளுக்கு 63 ரன்களை எடுத்தார். அதேபோல விராட் கோலி 63 பந்துகளுக்கு 50 ரன்களை எடுத்தார். மறுப்புறம் பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 169 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி வீரர்கள் களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் பேட்டர் அலெக்ஸ் ஹேல்ஸ் இருவருமே விக்கெட்டை பறிகொடுக்காமல் 16 ஓவர்களிலேயே ஆட்டத்தை எளிதில் முடித்தனர். அதிகபட்சமாக அலெக்ஸ் 47 பந்துகளுக்கு 86 ரன்களை எடுத்தார். பட்லர் 49 பந்துகளுக்கு 80 ரன்களை எடுத்தார். இந்திய பந்துவீச்சாளர்களின் மேசமான பந்துவீச்சு காரணமாகவே தோல்வி ஏற்பட்டதாக கிரிக்கெட் விமசகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் எம்எஸ் தோனியின் வருமானம் 30% உயரும்...?