ETV Bharat / sports

ENG vs IND: பழிதீர்த்த இங்கிலாந்து; படுதோல்வியடைந்த இந்தியா - ரீஸ் டோப்லி சாதனை! - Chahal

இந்திய அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்த்துள்ளது. ரீஸ் டோப்லி 24 ரன்கள் கொடுத்து, 6 விக்கெட்டை கைப்பற்றி ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து சிறந்த பந்துவீச்சை பதிவுசெய்தார்.

ENG vs IND
ENG vs IND
author img

By

Published : Jul 15, 2022, 7:39 AM IST

லண்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிக்களுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஜூலை 14) நடைபெற்றது. நேற்றைய போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சஹால் 4/47: இதன்படி, களமிறங்கிய இங்கிலாந்து அணியின் டாப்-ஆர்டர் பேட்டர்கள் சற்று சொதப்பினாலும், மிடில்-ஆர்டர் பேட்டர்கள் கைக்கொடுத்ததால், அந்த அணி 246 ரன்களை எட்டியது. அதிகபட்சமாக மொயின் அலி 47, டேவிட் வில்லி 21 ரன்களை எடுத்தனர். இந்திய அணி பந்துவீச்சில் சஹால், பேர்ஸ்டோவ், ரூட், ஸ்டோக்ஸ், மொயின் அலி என முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

டோப்லியிடம் வீழ்ந்து பெவிலியன் திரும்பும் சூர்யகுமார்

சொதப்பிய டாப்பர்கள்: இதைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. ரோஹித் 0, தவான் 9, ரிஷப் பந்த் 0, விராட் கோலி 9 என இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடர்ந்து, மிடில் ஆர்டரில் சூர்யகுமார் 27, ஹர்திக் பாண்டியா 29, ஜடேஜை 29, ஷமி 23 என சற்று ரன்களை எடுத்தாலும், அது போதுமானதாக இல்லை.

6 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்த டோப்லி

சரிந்தது இந்தியா: தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டைகளையும் இழந்தனர். இதன்மூலம், 38.5 ஓவர்களிலேயோ 146 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்டானது. இதன்மூலம், இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

ஆறுதல் அளித்த ஷமி
ஆறுதல் அளித்த ஷமி

டோப்லி 6/24: இந்திய அணியின் இந்த சரிவிற்கு முக்கிய காரணமானவர் ரீஸ் டோப்லி. ஓப்பனர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், டெயிலெண்டர்களில் ஷமி, சஹால், பிரசித் கிருஷ்ணா ஆகியோரை வெளியேற்றிய டோப்லி, 9.5 ஓவர்கள் வீசி 24 ரன்களை மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சர்வதேச போட்டிகளில் டோப்லியின் முதல் 5 விக்கெட் -ஹால் (Fifer) இதுவாகும்.

ரீஸ் டோப்லி சாதனை
ரீஸ் டோப்லி சாதனை

புதிய சாதனை: மேலும், ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்தின் சிறந்த பந்துவீச்சாக இது அமைந்துள்ளது. முன்னதாக, 2005இல் பால் காலிங்வுட் 31 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதே இங்கிலாந்தின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், டோப்லி ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

பழிதீர்த்தது இங்கிலாந்து
பழிதீர்த்தது இங்கிலாந்து

மான்செஸ்டரில் டிசைடர்: ஒருநாள் தொடரின் வெற்றியாளரை முடிவுசெய்யும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (ஜூலை 17) மான்செஸ்டர் நகரில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: ஜூனியர் விம்பிள்டன் - இளம் இந்தியா வீராங்கனை ஐஸ்வர்யா ஜாதவ் அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.