ETV Bharat / sports

அதிரடி மன்னர்கள் கெயில் , டி வில்லியர்ஸை கவுரவித்த ஆர்.சி.பி! - டி வில்லியர்ஸ்

கடந்த காலங்களில் தங்களது அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்த அதிரடி மன்னர்கள் கெயில் மற்றும் டி வில்லியர்ஸை ”ஹால் ஆஃப் ஃபேமில்” சேர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் நிர்வாகம் கவுரவப்படுத்தியுள்ளது.

கெயில் , டி வில்லியர்ஸ்
கெயில் , டி வில்லியர்ஸ்
author img

By

Published : May 17, 2022, 5:56 PM IST

அணிக்காக 3 ஆண்டுகளுக்கும் மேல் விளையாடி சிறப்பான பங்களிப்பை அளித்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம் ஹால் ஆஃப் ஃபேம்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஹாப் ஆஃப் ஃபேமில் இணையும் முதல் இரண்டு வீரர்களின் பெயர்களை அறிவித்தார்.

முதலாவதாக பெங்களூரு அணியில் 2011 முதல் 2021 வரை விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸின் பெயர் அறிவிக்கப்பட்டது. அப்போது காணொலி வாயிலாக டி வில்லியர்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெங்களூரு நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பெங்களூரு அணியில் 6 ஆண்டுகள் விளையாடி எண்ணற்ற சாதனைகளை படைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில், ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது விராட் கோலி, டி வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர் அணிக்கு அளித்த பங்களிப்பு பற்றி பாராட்டிப் பேசினார்.

மேலும் அடுத்த ஆண்டுகளுக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெறும்போது கெயில் மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோருக்கு ஹால் ஆஃப் ஃபேம் பதக்கங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஹால் ஆஃப் ஃபேம் என்பது, சிறந்த விளையாட்டு வீரர்களை அங்கீகரிக்கப் பயன்படுத்தப்படும் பட்டியல் ஆகும்.

இதையும் படிங்க: அசுர பலத்துடன் இந்தியாவுக்கு வரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.