ETV Bharat / sports

உலகக்கோப்பை ரீவைண்ட்: 2003ஆம் ஆண்டு ஆஸி.யிடம் தோற்றதற்கு 2011இல் கணக்கை தீர்த்த இந்தியா! - யுவ்ராஜ் சிங்

2011ஆம் ஆண்டின் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இன்றோடு 8 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் அதுகுறித்து சிறு தொகுப்பு...

யுவ்ராஜ் சிங்
author img

By

Published : Mar 25, 2019, 12:11 PM IST

2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. உலகக்கோப்பையில், 2003இல் நடந்த தொடருக்குப்பின் 2011ஆம் ஆண்டு நடந்த தொடர்தான் இந்திய ரசிகர்களை மிகவும் ஈர்த்தது.

அதற்கு முக்கிய காரணம், 28 வருடங்களுக்கு (1983) பிறகு இந்தியா உலகக்கோப்பையை வென்றது! கிரிக்கெட்டின் கடவுள் சச்சினின் கனவும் அப்போதுதான் நிறைவேறியது.சொந்த மண்ணில் தொடரைக் கைப்பற்ற முடியுமாஎன்ற சவாலில் இந்தியா வெற்றிபெற்றதற்குபல்வேறு காரணங்கள் உள்ளன.

இந்தத் தொடரில், இந்திய அணி காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதியது. பெரும்பாலானா 90'ஸ் கிட்ஸ், இந்தப் போட்டியைக் காலிறுதிப் போட்டியாக பார்க்காமல், 2003 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது இறுதிப் போட்டியாகவே பார்த்தனர்.

பிரயாக்ராஜில் (அப்போதைய அகமதாபாத்) நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் வாட்சன் விக்கெட்டை வீழ்த்துவதற்காகவே, தோனி அஷ்வினை களமிறக்கினார். அதன் பலன், விரைவில் கிட்டியது. பவர்-பிளே ஓவரில் வாட்சனை அஷ்வின் போல்ட் ஆக்கினார்.

இருப்பினும், அதுவரை அந்தத் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிக்கி பாண்டிங், அந்தப் போட்டியில் சதம் விளாசி அசத்தினார். இறுதியில் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய அணி 261 ரன்களை டார்கெட்டாக நிர்ணயம் செய்தது.

இந்திய அணிக்கு சேவாக், டெண்டுல்கர் வழக்கம்போல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அந்தத் தொடரில் அதுவரை எதிர்கொண்ட முதல் பந்துகளை பவுண்டரிகளாக பறக்க விட்ட சேவாக், அந்தப் போட்டியில் பிரட் லீயின் பந்தை டிஃபென்ஸ் ஷாட் ஆடினார். ஆனால், அடுத்த ஓவரில் சச்சின் தனது முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசினார். சேவாக்கை விடவும், சச்சின் ஷாட் ஆடுவதில் மிகவும் கான்ஃபிடென்ட்டாக இருந்தார்.

சேவாக் நடையைக் கட்டினாலும், மறுமுனையில் தனது அனுபவமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், 2003 இறுதிப்போட்டியில்சொதப்பியது போலவே மீண்டும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்துவிடுமோ என்ற பயம் ரசிகர்களின் மனதில் தோன்றியது.

ஆனால், களத்திலிருந்த கம்பீர்-யுவராஜ் ஜோடிசேர்ந்து பொறுப்புடன் விளையாடி அரை சதம் விளாசினார். பின்னர் ரன் ஓடுவதில் இவ்விரு வீரர்களுக்கு இடையே குழப்பம் நேரிட்டது. இதை விளைவாகவே, செட் பேட்ஸ்மேனாக இருந்த கம்பீர் ரன் அவுட் ஆனார்.

பின்னர் களத்தில் வந்த தோனியும் சொதப்ப, மறுமுனையில் ஃபார்மில் இருந்த யுவராஜ் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை பவுண்டரிகளாக வெளுத்துக்கட்டினார். அவரை எந்த ஆஸ்திரேலிய வீரர்களாலும் ஏன், ரிக்கி பாண்டிங்கின் கேப்டன்ஷிப்பாலும் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

ரெய்னாவும் தன்பங்கிற்கு பவுண்டரிகளை விளாசினார். இவ்விரு வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால்இந்திய அணி 47.4 ஓவர்களில் வெற்றிபெற்று ஆஸ்திரேலியாவை தொடரிலிருந்து வெளியேற்றியது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி பின்னர் உலகக்கோப்பை தொடரையும் வென்று அசத்தியது.

2003 மார்ச் 23இல் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை பறிகொடுத்தது. எட்டு வருடங்களுக்குப் பிறகு 2011 மார்ச் 24இல் இந்திய அணி அந்தத் தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது. இதனால்தான் பெரும்பாலான 90'ஸ் கிட்ஸ்களுக்கு இந்தப் போட்டி மிகவும் பிடித்த போட்டியாகவே அமைந்தது.

எப்படி கிளைவ் லாயிட்டின் ஹாட்ரிக் உலகக் கோப்பை கனவை கபில்தேவ் தகர்ந்தெறிந்தாரோ, அதுபோலவே, தனது கேப்டன்ஷிப் மூலம் ஹாட்ரிக் உலகக் கோப்பையை (2003, 2007) வென்றுவிடலாம் என்று நம்பிக்கையுடன் இருந்த ரிக்கி பாண்டிங்கின் கனவை தோனி தவிடுபொடியாக்கினார்.

Intro:Body:

add

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.