ETV Bharat / sports

உலகக் கோப்பை ரீவைண்ட்: பாகிஸ்தானிடம் நான்கு முறை உயிர் தப்பிய சச்சின்..! - Sehwag

2011 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி நேற்றோடு எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்தியா - பாக் 2011 அரையிறுதிப் போட்டி
author img

By

Published : Mar 31, 2019, 7:15 AM IST

Updated : Mar 31, 2019, 12:33 PM IST

அரசியலில் மட்டுமின்றி, கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவும், பாகிஸ்தானும் பரம எதிரிகள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். பொதுவாக, இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே, அனல் பறக்கும், அதுவும் உலகக் கோப்பை தொடர் என்றால் போதும் சொல்லவே தேவையில்லை இன்னும் போட்டி சூடுபிடிக்கும்.

இவ்விரு அணிகள் மோதிய ஆட்டங்களில், குறிப்பாக உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மறக்க முடியாத வகையில் ஏராளமான சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

2010 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின், மார்ச் 30ஆம் தேதி 2011 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில்தான் பாகிஸ்தான் அணியைஇந்தியாசந்தித்தது.

அதுவரை உலகக் கோப்பை தொடர்களில் லீக் ஆட்டங்களில் மட்டுமே மோதிக்கொண்ட இந்தியா - பாகிஸ்தான், இம்முறை அரையிறுதிப் போட்டியில் மோதிக்கொண்டதால், இந்தப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது. மொகாலியில் நடைபெற்ற இப்போட்டியைக் காண 5,000க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் டிக்கெட் வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வழக்கம் போல், சச்சினும், சேவாக்கும் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதுவரை அந்த தொடரின் அனைத்து லீக் ஆட்டங்களிலும் முதல் பந்தில் பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கிய சேவாக் இந்தப் போட்டியில், மூன்றாவது பந்தில்தான் பவுண்டரி அடித்தார்.

பின், உமர் குல் வீசிய மூன்றாவது ஓவரில் சேவாக் ஐந்து பவுண்டரிகளை விளாசி மிரட்டினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் டி20 போட்டியை போல் ஆடிய சேவாக், 25 பந்துகளில் 9 பவுண்டரி உட்பட 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பவுண்டரிகள் மூலமே அவர் 36 ரன்களை எடுத்ததுதான் கூடுதல் சிறப்பு.

அவரைத் தொடர்ந்து, கம்பீர் 27 ரன்களுக்கு அவுட் ஆக கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் வஹாப் ரியாஸின் பந்துவீச்சில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். மறுமுனையில், சச்சின் எந்தவித பதற்றமுமின்றி துல்லியமான பேட்டிங்கை வெளிபடுத்தினார். இதனிடையே, சயத் அஜ்மல் வீசிய ஓவரில் அவர் எல்பிடபள்யூ முறையில் அவுட் என்று நடுவர் இயன் குட் அறிவித்தார். அடுத்த கணமே, சச்சின் ரிவ்யூ எடுத்தார். அதில், பந்து ஸ்டெம்பை மிஸ் செய்வது தெரியவந்ததால், அவர் நாட் அவுட் என்று தீர்ப்பு வந்தது. தான் வழங்கிய தீர்ப்பு தவறா என்று குழம்பினார் இயன் குட்.

INDvPAK 2011
மூன்றாவது நடுவரின் தீர்ப்புக்காக காத்திருந்த சச்சின்

இதைத்தொடர்ந்து, அடுத்த பந்திலேயே மீண்டும் சச்சின் ஸ்டெம்பிங் ரூபத்தில் ரசிகர்களுக்கு அடுத்த ஷாக் தந்தார். இம்முறையும் சச்சின் சரியான நேரத்தில் கிரீஸில் காலெடுத்து வைத்ததால் அவர் மீண்டும் நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த இரண்டு பந்துகளும், இந்திய ரசிகர்களை பதற்றம் அடையவைத்தது. இதைத்தொடர்ந்து, இந்தப் போட்டியில், சச்சின் தனது 100-வது சதத்தை பூர்த்தி செய்வார் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். சச்சின் மட்டுமே களத்தில் இருந்ததால் அவர் சதம் அடிப்பதற்கும் அதிகமான வாய்ப்புகள் இருந்தது.

INDvPAK 2011
பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் 85 ரன்களை அடித்தார்.

அதேசமயம், பலமுறை தவறான ஷாட் ஆடிய சச்சின் நான்குமுறை அவுட் ஆகியிருப்பார். ஆனால், பாகிஸ்தான் அணியின் மோசமான ஃபீல்டிங்கினால் அவர் ஆறுமுறையும் தப்பினார். பாகிஸ்தான் வீரர்களின் இதுபோல் சச்சினின் கேட்சை தவறவிட்டது போட்டியில் அவர்கள் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டார்களா என்ற கேள்வியையும் எழுப்பியது.

வாய்ப்புகள் இல்லாமலே, சதம் விளாசக்கூடியவர் சச்சின். ஆனால், நான்கு வாய்ப்புகள் இருந்தும் அவர் இந்தப் போட்டியில் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆனபிறகு இறுதிக் கட்டத்தில் சுரேஷ் ரெய்னா சற்று அதிரடியாக ஆடியதால், இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்களை எடுத்தது.

இதைத்தொடர்ந்து, 261 ரன் இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியில் கம்ரான் அக்மலின் விக்கெட்டை ஜாகிர் கானும், முகமது ஹபிஸின் விக்கெட்டை முனாப் படேலும் வீழ்த்தினர். அவரைத்தொடர்ந்து, வந்த மற்ற வீரர்களான அசாத் ஷஃபிக், யூனிஸ் கான், கேப்டன் அப்ரிதி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் உடும்பாய் இருந்த மிஸ்பா-உல்-ஹக் கடும் போராட்டத்துக்குப் பின், இறுதி ஓவரில் அவுட் ஆனார். இதனால், இந்திய அணி 29 ரன்களில் வெற்றிபெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

INDvPAK 2011
இறுதி சுற்றில் முன்னேறி மகிழ்ச்சியில் இந்திய அணி

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மீண்டும் இவ்விரு அணிகள் அரையிறுதிப் போட்டியில் அல்லது இறுதிப் போட்டியில் மோதுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருந்தாலும், அதில், இந்தியா, பாகிஸ்தானை எதிர்த்து ஆடுமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

Intro:Body:Conclusion:
Last Updated : Mar 31, 2019, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.