உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு! - Joe root
லண்டன் : 2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
12ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. அதில் பங்கேற்கவுள்ள வீரர்களை ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகள் உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் வீரர்களை அறிவித்திருந்த நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
அந்த அணிக்கு இயன் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பேட்ஸ்மேன்களாக ஜேசன் ராய், ஜானி பெயர்ஸ்டோவ், அலெக்ஸ் ஹெல்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர், ஜோ டென்லி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சுழற்பந்து வீச்சாளர்களாக அடில் ரஷீத் மற்றும் மொயின் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ப்ளன்கட், சாம் கரன் இடம்பெற்றுள்ளனர்.
இந்த உலகக் கோப்பையை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ள அணிகளில் முதலாம் இடத்தில் இங்கிலாந்து அணி இருப்பதால், உலகக்கோப்பை வீரர்கள் பட்டியலை கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம் கரன், ஐபிஎல் புகழ் ஆர்ச்சர் ஆகியோர் இடம்பெறாதது ரசிகர்களிகள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணி விவரம் :
இயன் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பெயர்ஸ்டோவ், சாம் கரன், ஜோ டென்லி, அலெக்ஸ் ஹேல்ஸ், ப்ளன்கட், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.
England squad announced for world cup
Conclusion: