ETV Bharat / sports

உலக கோப்பை ரீவைண்ட்: ஆஸி.யின் 5-வது கோப்பை '2015'

2015-ல் நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி இன்றோடு நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அந்த போட்டி குறித்து சிறப்பு தொகுப்பு ரசிகர்களின் பார்வைக்கு...

author img

By

Published : Mar 30, 2019, 8:14 AM IST

ஆஸி.யின் 5-வது கோப்பை '2015'

11-வது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் 2015ஆம் ஆண்டில் இணைந்து நடத்தியது.

குறிப்பாக, 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்றதால், சொந்த மண்ணில் தொடரை வெல்ல வேண்டும் என்ற ஆசை இரு அணிகளுக்குமே இருந்தது. இதற்கு முக்கிய காரணம், 2011-ல் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் தொடரை இணைந்து நடத்தியதில், இந்திய அணி இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றதுதான்.

14 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில், ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தியும், நியூசிலாந்து தென்னாப்பிரக்காவை போராடி தோற்கடித்தும் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது போலவே, ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி மார்ச் 29ஆம் தேதி 2015-ல் மெல்போர்னில் நடைபெற்றது.

உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணி முதல்முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியதால், அவர்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் ஆஸ்திரேலிய அணியின் மைக்கில் கிளார்க் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற ஆசை ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு இருந்தது.

இதைத்தொடர்ந்து, டாஸில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி எந்தவித தயக்கமுமின்றி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அதுவரை அந்த தொடரில் அதிரடியான பேட்டிங்கை வெளிபடுத்திய மெக்கல்லம், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை மிரட்டுவார் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஸ்டார்க்கின் யார்கர் பந்துவீச்சில் மெக்கல்ம் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார்.

McCullum
ஸ்டார்க் பந்துவீச்சில் போல்ட் ஆன மெக்கல்லம்

இதனால், மனதளவில் நியூசிலாந்து அணியின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது. அவரைத்தொடர்ந்து வந்த மற்ற நியூசிலாந்து வீரர்களும் பேட்டிங்கில் சொதப்ப, இறுதியில் 183 ரன்களை மட்டுமே அவர்கள் எடுத்தனர்.

184 என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஃபின்ச் டக் அவுட் ஆனார். இருந்தாலும், ஸ்டீவ் ஸ்மித், வார்னர், அவர்களுடன் மைக்கிள் கிளார்க் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி 33.1 ஓவரிலேயே இலக்கை வெற்றிகரமாக எட்டியது. இதன் மூலம் ஐந்தாவது முறையாக உலகக் கோப்பை ஒருநாள் தொடரை கைப்பற்றி மீண்டும் கிரிக்கெட்டின் சாம்பியன் என்பதை ஆஸ்திரேலியா நிரூபித்தது.

அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலிய அணி விளையாடிய பெரும்பாலான இறுதி போட்டிகளில் அவர்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் சரி, அல்லது சேஸிங் செய்தாலும் சரி சிங்கிள் சைட் கேமாகதான் இருக்கும் என்பதும் நிரூபனமானது.

Clark
உலகக் கோப்பையோடு ஒருநாள் கிரிக்கெட்டில் விடைபெற்றார் கிளார்க்

2011-ல் உலகக் கோப்பை தொடரை நடத்திய இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற வரிசையில் ஆஸ்திரேலியாவும் இடம்பிடித்தது. தற்போது அந்த வரிசையில் இங்கிலாந்து அணியும் இடம்பிடிக்குமா என்பது உலகக் கோப்பை தொடரை பார்த்தால்தான் தெரியும்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.