ETV Bharat / sports

NZ Vs SA: மகாராஜ், ஜான்சன் பந்துவீச்சில் சுருண்ட நியூசிலாந்து.. 190 ரன்களில் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 7:36 PM IST

Updated : Nov 1, 2023, 10:10 PM IST

World cup 2023: நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

south africa won by 190 runs
south africa won by 190 runs

புனே: ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரின் 32 வது லீக் ஆட்டம் இன்று (நவ.01) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா களம் இறங்கினர். இத்தொடரில் இதுவரை பெரிதாக சோபிக்காத பவுமா இப்போட்டியிலும் 28 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் அதன்பின் வந்த ரஸ்ஸி வான் டெர் டுசென் - டி காக்வுடன் கைகோர்த்தார். இந்த ஜோடி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சைத் துவம்சம் செய்தது. இருவரும் அரைசதம் கடக்க, தொடக்க முதல் சிறப்பாக விளையாடிய டி காக் சதம் விளாசினார். பின்னர் 114 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த சதம் மூலம் நடப்பாண்டு உலக கோப்பையில் தனது 4வது சதத்தைப் பதிவு செய்தார்.

இவரைத் தொடர்ந்து சதம் அடித்த வான் டெர் டுசென் 133 ரன்களில் ஆட்டமிழக்க, டேவிட் மில்லரின் அதிரடியான அரைசதத்தால் அணியின் ஸ்கோர் 350 ரன்களை நெருங்கியது. 50 ஓவர்கள் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக டிம் சவுதி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது நியூசிலாந்து அணி. பேட்டிங்கை போலவே பந்து வீச்சிலும், தென் ஆப்பிரிக்கவின் அதிக்கமே இருந்தது. இதனால் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் டெவான் கான்வே 2 ரன்களில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா 9, வில் யங் 33, டேரில் மிட்செல் 24, டாம் லாதம் 4 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மிடில் ஆர்டரில் களம் இறங்கிய க்ளென் பிலிப்ஸ் மட்டுமே சிறப்பாக விளையாடி 60 ரன்கள் எடுக்க, இறுதியில் 35.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பந்து வீச்சாளர்களான கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். இந்த அபார வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல் 3 வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி 4வது இடத்திற்கு இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: David Willey: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வை அறிவித்த டேவிட் வில்லி!

Last Updated : Nov 1, 2023, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.