ஹைதராபாத்: ஐசிசி நடத்தும் ஒருநாள் உலக கோப்பை இன்று (அக்டோபர் 05) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியாக ஆஸ்திரேலியா அணியை வரும் 8ம் தேதி எதிர்கொள்கிறது. அனைத்து அணிகளுமே இந்த தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. இந்நிலையில், நாம் இந்த தொகுப்பில் பார்க்க இருப்பது, இதுவரை நடைபெற்ற உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட டாப் 5 பீல்டர்களை பற்றி தான்.
1) ரிக்கி பாண்டிங்
இந்த பட்டியலில் முதலில் இடத்தில் இருப்பது, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். இவர் 1996 - 2011 உலக கோப்பையில் 46 போட்டிகளில் விளையாடி 28 கேட்ச்களை எடுத்துள்ளார். உலக கோப்பையில் இவரின் கேட்ச் சராசரி 0.608 உள்ளது.
2) ஜோ ரூட்
இங்கிலாந்து வீரரான இவர் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 2015 மற்றும் 2019 உலக கோப்பையில் இவர் 17 போட்டிகளில் 20 கேட்ச்கள் பிடித்து அசத்தியுள்ளார்.
3) சனத் ஜெயசூர்யா
முன்னால் இலங்கை வீரரான சனத் ஜெயசூர்யா இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். 1992 முதல் 2007 வரையிலான உலக கோப்பையில் விளையாடி இருக்கும் இவர் 38 போட்டிகளில் 18 கேட்ச்கள் பிடித்துள்ளார்.
4) கிறிஸ் கெய்ல்
முன்னாள் அதிரடி வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிறிஸ் கெய்ல் 2003 முதல் 2019 வரை விளையாடிய உலக கோப்பை போட்டிகளில் 17 கேட்ச்கள் பிடித்து இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.
5) பாஃப் டு பிளெசீ
இந்த பட்டியலின் 5வது இடத்தை பிடித்தவர் தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் பாஃப் டு பிளெசீ. இவர் 2011 முதல் 2019 வரையிலான உலக கோப்பையில் விளையாடி உள்ளார். அதில் 20 போட்டிகளில் 16 கேட்ச்கள் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இதுக்கு மேல லியோ தான் வந்து சொல்லணும்.. ரத்தம் தெறிக்கும் லியோ டிரெய்லர்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!!