டெல்லி: ஐசிசி உலக கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதன் 24வது லீக் ஆட்டத்தில் 5 முறை உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியை நெதர்லாந்து அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டி டெல்லில் உள்ள அருன் ஜெட்லி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
பொதுவாக பெரிய தொடரில் அசத்தும் ஆஸ்திரேலிய அணி, நடப்பு உலக கோப்பையில், தொடக்கமே தடுமாற்றத்தை சந்தித்தது. தொடர்ந்து இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் கடும் தோல்வியை தழுவியது. ஆனால், அதன்பின் அந்த அணி தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்றுள்ளது அந்த அணி. இதனால் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியை நாளை எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை பேட்டிங்கில் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஸ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் இருவரும், அதிரடியாக விளையாடி சதம் விளாசினர். சக வீரர்களான ஸ்மித், லபுசேன் இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை. மிடில் ஆர்டரில் இறங்கும், மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டோனிஸ் ஆகியோர் அணிக்கு பக்க பலமாக உள்ளனர்.
மேலும், காயம் காரணமாக ஓய்வில் இருந்து வந்த டிராவிஸ் ஹெட், இந்த போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் அணியில் இடம் பெறும் பட்சத்தில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வரும் மிட்செல் மார்ஸ் ஒன் டவுனில் களம் இறக்கப்பட்டு, லபுசேன் வெளியேறப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் பந்து வீச்சில், ஜோஸ் ஹசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் நல்ல நிலையிலேயே உள்ளனர். ஸ்பின்னர்களை பொருத்தவரை அவர்கள் ஆடம் ஜம்பா, மேக்ஸ்வெல்லை நம்பியே உள்ளனர். சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அந்த அணியில் ஸ்பின்னர்கள் இல்லை என்றாலும், கடந்த இரண்டு போட்டிகளில் ஆடம் ஜம்பா சிறப்பாகவே செயபட்டுள்ளார்.
மறுபக்கம் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி, விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்விகளை சந்தித்துள்ளனர். ஆனால் அவர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வரலாற்று வெற்றியை பெற்று, முன்னனி அணிகளுக்கு பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
பேட்டிங்கை பொருத்தவரையில், தொடக்க வீரர்களான மேக்ஸ் ஓடோவ்ட் மற்றும் விக்ரம்ஜித் சிங் ஆகியோரால் இதுவரை நல்ல தொடக்கத்தை அளிக்க முடியவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் 78 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 200 ரன்களுக்கு மேல் உயர்த்த உதவினார். மேலும், மற்ற வீரர்கள தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினால் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு சவால் அளிக்க முடியும்.
மோதும் அணிகள்: ஆஸ்திரேலியா - நெதர்லாந்து.
நேரம்: பிற்பகல் 2மணி.
இடம்: அருன் ஜெட்லி மைதானம், டெல்லி.
கணிக்கப்பட்ட இரு அணிகளுக்கான பிளேயிங் 11
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஸ், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஸ் இங்கிலிஸ்(விகீ), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசல்வுட், ஆடம் ஜம்பா.
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், தேஜா நிடமனூரு, ஸ்காட் எட்வர்ட்ஸ்(விகீ & கேப்டன்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.
இதையும் படிங்க: Wasim Akram : "8 கிலோ இறைச்சியை சாப்பிட்டால்..." - பாக். வீரர்களை சாடிய வாசிம் அக்ரம்!