உலகக்கோப்பைத் தொடரில் இந்திய இளம் சுழற்பந்துவீச்சாளர் சாஹல், இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் மிடில் ஓவர்களில் வீழ்த்தும் விக்கெட்டுகளோடு, பவுலிங் சராசரியையும் சரியாக வைத்திருப்பதால் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
இந்நிலையில், உலகக்கோப்பைத் தொடர் குறித்து அவர் பேசுகையில், ‘இங்கிலாந்து அணி பெரும் வலிமை வாய்ந்த அணி. அவர்களை வீழ்த்துவதற்கு சரியான திட்டம் வகுத்து வருகிறோம். இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருப்பதற்கு அனைவரும் காரணம்’ என்றார்.
இதனையடுத்து, செஸ் விளையாட்டு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘ஆம், 2002-இல் 12 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய சாம்பியன் ஆனேன். அதன் பின்னர் 2003-இல் உலகக்கோப்பை செஸ் தொடருக்காக கிரீஸ் சென்று விளையாடினேன். இதனையடுத்து செஸ் அல்லது கிரிக்கெட் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
-
Hear from @yuzi_chahal on...
— ICC (@ICC) June 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
⚫ His first @cricketworldcup
⚫ India's progress so far
⚫ England's batting against spin
⚫ His role within an elite bowling attack#TeamIndia | #CWC19 pic.twitter.com/LX3DdxDATB
">Hear from @yuzi_chahal on...
— ICC (@ICC) June 30, 2019
⚫ His first @cricketworldcup
⚫ India's progress so far
⚫ England's batting against spin
⚫ His role within an elite bowling attack#TeamIndia | #CWC19 pic.twitter.com/LX3DdxDATBHear from @yuzi_chahal on...
— ICC (@ICC) June 30, 2019
⚫ His first @cricketworldcup
⚫ India's progress so far
⚫ England's batting against spin
⚫ His role within an elite bowling attack#TeamIndia | #CWC19 pic.twitter.com/LX3DdxDATB
இது குறித்து எனது அப்பாவிடம் பேசியபோது, செஸ்ஸில் இந்திய அளவில் நீ விளையாடிவிட்டால் கிரிக்கெட் ஆட செல்லலாம் என தெரிவித்துள்ளார். பின்னர் செஸ்ஸில் உலகக்கோப்பை தொடரில் ஆடியதால் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் விளையாட்டிற்குத் திரும்பிவிட்டேன்’ என கூறினார். சிறுவயதிலேயே தனது தந்தையின் கனவை நனவாக்கிவிட்டு கிரிக்கெட் விளையாட்டுக்கு திரும்பிய சாஹலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.