சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்றும் முன்தினமும்
இறுதிப்போட்டியின் முதல் நாள் (ஜுன் 18) ஆட்டம், மழைக் காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. நேற்று (ஜுன் 19) டாஸ் போடப்பட்டு, இந்தியா முதலில் பேட்டிங் செய்து வந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணத்தினால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
-
Good news from Southampton 😃
— ICC (@ICC) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Day three of the #WTC21 Final will get underway at 11:00 am local time!#INDvNZ pic.twitter.com/12WYxdnsMl
">Good news from Southampton 😃
— ICC (@ICC) June 20, 2021
Day three of the #WTC21 Final will get underway at 11:00 am local time!#INDvNZ pic.twitter.com/12WYxdnsMlGood news from Southampton 😃
— ICC (@ICC) June 20, 2021
Day three of the #WTC21 Final will get underway at 11:00 am local time!#INDvNZ pic.twitter.com/12WYxdnsMl
இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று (ஜுன் 20) திட்டமிட்டப்படி மதியம் 3 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சவுத்தாம்ப்டனில் தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தினால் மைதானத்தின் அவுட் ஃபீல்ட் (OUT FIELD) ஈரப்பதம் நிறைந்து காணப்படுகிறது. இதனால், அரை மணிநேரம் தாமதாக ஆட்டம் தொடங்கப்படும் என போட்டி நடுவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலிக்கு வெயிட்டிங்
தற்போது இந்திய அணி தரப்பில் கேப்டன் விராட் கோலி 44(124) ரன்களுடனும், துணை கேப்டன் ரஹானே 29(79) ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.
இதனால், கோலியின் அரை சதத்தைக் காண ஏங்கியுள்ள ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: WTC FINAL: நாள் முழுவதும் உள்ளே வெளியே ஆட்டம்; நங்கூரமிட்டு நிற்கும் கோலி