சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
நிதான ஜோடி
இதனையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். நியூசிலாந்து அணியின் ஓப்பனிங் ஸ்பெல்லை சவுத்தியும், போல்டும் தொடங்கினர்.
-
Rohit Sharma and Shubman Gill provide India with a steady start!
— ICC (@ICC) June 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🇮🇳 37/0 after 10 overs.#WTC21 Final | #INDvNZ | https://t.co/Td1k3L0qAM pic.twitter.com/rlXJL13iWe
">Rohit Sharma and Shubman Gill provide India with a steady start!
— ICC (@ICC) June 19, 2021
🇮🇳 37/0 after 10 overs.#WTC21 Final | #INDvNZ | https://t.co/Td1k3L0qAM pic.twitter.com/rlXJL13iWeRohit Sharma and Shubman Gill provide India with a steady start!
— ICC (@ICC) June 19, 2021
🇮🇳 37/0 after 10 overs.#WTC21 Final | #INDvNZ | https://t.co/Td1k3L0qAM pic.twitter.com/rlXJL13iWe
சவுத்தி தொடக்கத்தில் இருந்தே பந்தை ஸ்விங் செய்து இரண்டு வலதுகை பேட்ஸ்மேன்களையும் அச்சுறுத்தினார். ஆனால், போல்ட்டுக்கோ சரியான ஆங்கிள் சிக்கமால் சற்று லெக்-திசையிலேயே பந்துவீசி வந்தார். இருப்பினும், இருவரின் ஓவரிலும் சற்று ரன்கள் வர, முதல் பத்து ஓவரில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்களை எடுத்தது.
வந்தார் ஜேமீசன்; வீழ்ந்தார் ரோஹித்
இதன்பின் சவுத்திக்கு பதிலாக ஜேமீசனும், போல்ட்டுக்கு பதிலாக காலின் டி அடுத்த ஓவர்களை வீசினர். இருவரும் கட்டுக்கோப்பாக வீசினாலும், 20 ஓவர் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 62 ரன்களை குவித்தது.
-
First breakthrough for the @BLACKCAPS 💥
— ICC (@ICC) June 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Kyle Jamieson gets the big scalp of Rohit Sharma!
He is out for 34.#WTC21 Final | #INDvNZ | https://t.co/Yx17nCTHnw pic.twitter.com/nFe8dyX3tD
">First breakthrough for the @BLACKCAPS 💥
— ICC (@ICC) June 19, 2021
Kyle Jamieson gets the big scalp of Rohit Sharma!
He is out for 34.#WTC21 Final | #INDvNZ | https://t.co/Yx17nCTHnw pic.twitter.com/nFe8dyX3tDFirst breakthrough for the @BLACKCAPS 💥
— ICC (@ICC) June 19, 2021
Kyle Jamieson gets the big scalp of Rohit Sharma!
He is out for 34.#WTC21 Final | #INDvNZ | https://t.co/Yx17nCTHnw pic.twitter.com/nFe8dyX3tD
அடுத்து, 21ஆவது ஓவரை வீச வந்தார் ஜேமீசன். ஜேமீசன் வீசிய முதல் பந்து ஆஃப்-ஸ்டமிற்கு வெளியே செல்ல, அதை ரோஹித் நேராக அடிக்க முயன்றார். அப்பந்து பேட்டின் வெளிமுனையில் பட்டு ஸ்லிப்பில் நின்ற சவுத்தியிடம் தஞ்சம் புகுந்தது.
இதனால், ரோஹித் சர்மா 34(68) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
புகுந்தார் புஜாரா; சென்றார் கில்
இதன்பின் களம்புகுந்த புஜாரா கடுமையான தடுப்பாட்டத்தை விளையாடினார். மறுமுனையில் கில்லும் பொறுமையுடன் ஆட முயன்றுகொண்டிருந்தார். அந்தநேரத்தில் இடக்கை பந்துவீச்சாளரான வாக்னரை இறக்கினார் வில்லியம்சன்.
25ஆவது ஓவரை வீசிய வாக்னர், தனது மூன்றாவது பந்தில் கில்லை விக்கெட் எடுத்துவிட்டார். சரியான லெங்த்தில் சற்று வெளியே சென்ற பந்தை, கில் ஆட முயன்று பின்வாங்க, பந்து பேட்டை உரசிவிட்டு கீப்பரிடம் சென்றுவிட்டது. சுப்மன் கில் 28(64) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
-
India are two wickets down at lunch. How is everyone reacting?
— ICC (@ICC) June 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Check out our social feed of the #WTC21 Final 📰 https://t.co/T0IioUX8in pic.twitter.com/Aw7CJJCgn7
">India are two wickets down at lunch. How is everyone reacting?
— ICC (@ICC) June 19, 2021
Check out our social feed of the #WTC21 Final 📰 https://t.co/T0IioUX8in pic.twitter.com/Aw7CJJCgn7India are two wickets down at lunch. How is everyone reacting?
— ICC (@ICC) June 19, 2021
Check out our social feed of the #WTC21 Final 📰 https://t.co/T0IioUX8in pic.twitter.com/Aw7CJJCgn7
இதையடுத்து 28 ஓவர்களுடன் முதல் செசன் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் புஜாரா 24 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமலும், விராட் கோலி 6(12) ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து அணியில் ஜேமீசன் 7 ஓவர்களை வீசி 10 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து (4 மெய்டன்) ஒரு விக்கெட்டையும், நீல் வாகனர் 2 ஓவர்கள் வீசி 5 ரன்களை விட்டுக்கொடுத்து (1 மெய்டன்) ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தொடங்கியது கோலி vs கேன் பலப்பரீட்சை: இந்தியா பேட்டிங்