WorldMilitaryGames: உலக ராணுவ விளையாட்டுகள் தொடர் ஏழாவது முறையாக சீனாவின் வூ ஹான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் குத்துச்சண்டை காலிறுதிக்கு முந்தையச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அமித் பங்கல், துனிசியாவின் போக்ம்னியை(Boughanmi) எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியாவின் அமித் பங்கல் 4-1 என்ற புள்ளிகள் அடிப்படையில் துனிசியாபின் போக்ம்னியை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஏற்கனவே அமித் பங்கல் இந்தாண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் குத்துச்சணடை போட்டியில் இறுதிவரை சென்று வெள்ளி பதக்கத்தைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #WBC2019: முதல்முறையாக பாக்ஸிங் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்தியர்..!