2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இதன் முதல் அரையுறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் இந்திய வீரர்களின் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததையடுத்து, நியூசி. கேப்டன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நேற்றைய ஆட்டத்தில் வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த உலககோப்பையில் 548 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து வீரர் ஒருவர் உலகக்கோப்பைத் தொடரில் 548 ரன்கள் குவிப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை வில்லியம்சன் இரண்டு சதம், இரண்டு அரைசதம் அடித்துள்ளார். மேலும் நேற்றைய ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இன்று மாற்றப்பட்டது. இன்று நடைபெறும் மீதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று இறுதிக்கு தகுதி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.