ETV Bharat / sports

ஆறுதல் வெற்றி யாருக்கு? ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் மோதல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.

cricket
author img

By

Published : Jul 4, 2019, 10:44 AM IST

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று லீட்ஸில் நடைபெறும் 42ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியை தவிர்த்து அடுத்து வந்த அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவி அரையிறுதி வாய்ப்பையும் இழந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு போட்டிகளில் 1 வெற்றி, 6 தோல்வி, 1 ரத்து என மூன்று புள்ளிகளுடன் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. அந்த அணியில் கெயில், ஹெட்மயர், பூரன், ஹோல்டர் என பல்வேறு அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ள போதிலும் அந்த அணி தொடர் தோல்வியையே சந்தித்து இம்முறை மோசமான நிலையில் உள்ளது.

இதேபோன்று கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் ஆடிய எட்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி இந்தியா, கடைசியா ஆடிய பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டங்களில் சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி ஓவர்கள் வரை சென்று தோல்வியை தழுவியது. ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் நயீப், ரஹ்மத் ஷா, மொகமது நபி என அனைவரும் பேட்டிங் செய்தாலும் யாரும் நிலைத்து ஆடி பெரிய ஸ்கோரை எட்ட முடியாததே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ள நிலையில் இன்று நடைபெறும் போட்டி இரு அணிகளுக்கும் நடப்பு தொடரில் கடைசி போட்டியாகும். எனவே இன்றைய போட்டியில், வெற்றி பெற்று நாடு திரும்ப வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

Intro:Body:

CWC19: AFG vs WI preview

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.