ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை - 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை! - வங்கதேசம்

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் வீரர்கள் அசலங்கா, பானுகா ராஜபக்ச ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் வங்கதேசத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.

Sri Lanka beat Bangladesh, Sri Lanka vs Bangladesh, Sri Lanka match report, ICC T20 World Cup, டி20 உலகக் கோப்பை, இலங்கை vs வங்கதேசம், இலங்கை, வங்கதேசம், இலங்கை வெற்றி
டி20 உலகக் கோப்பை
author img

By

Published : Oct 24, 2021, 9:19 PM IST

டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் முகமது நயிம் 62 ரன்கள் குவித்தார். அதிரடியாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 36 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 57 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார்.

இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின், தொடக்க வீரர்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர். மூன்றாவது வீரராக களமிறங்கிய சரித் அசலங்கா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

மறுமுனையில் பனுகா ராஜபக்சவும் வங்காளதேச பந்துவீச்சை துவம்சம் செய்தார். இருவரும் அரை சதம் கடந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். பனுகா ராஜபக்ச 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் சரித் அசலங்காவுடன் கேப்டன் சனகா இணைய, இலங்கை அணி 18.5 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. சரித் அசலங்கா 49 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 80 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.