லண்டனில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் 44 ஆவது லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைக் குவித்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மேத்யூவ்ஸ் 113 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
![ரோகித் சர்மா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3767815_rohit.jpg)
இதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தது. இலங்கை அணி வீரர்களின் பந்துவீச்சை பந்தாடிய ரோகித் சர்மா -லோகேஷ் ராகுலும் இணைந்து 187 ரன்களை குவித்தனர். இந்நிலையில், இந்திய அணியின் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா 92 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து சதம் விளாசினார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடர் ஒன்றில் 5 சதங்கள் அடித்து ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். 103 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டம் இழந்தார்.