உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பவுண்டரிகள் அடிப்படையில் நியூசிலாந்து அணியை வெற்றிகண்ட இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டிக்கு இது காரணம், அது காரணம் என்று பலரும் கூறிவந்தாலும் தற்போது புதிய காரணம் ஒன்று கிடைத்துள்ளது.
ஆம் அது என்னவென்றால் நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியைக் காண வந்திருந்த ஒரு தாத்தா-தான் காரணாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குக் காரணம் 'டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷல்' என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியான அந்தப் புகைப்படம்தான் இந்த கேள்வியை நமக்குள் எழச்செய்துள்ளது.
-
John Ayling saw @England win the 1966 World Cup at Wembley.
— Test Match Special (@bbctms) July 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
He saw @EnglandRugby win the 2003 World Cup in Sydney.
Will he make it the hattrick at @HomeOfCricket today? pic.twitter.com/ys2wKQuwBl
">John Ayling saw @England win the 1966 World Cup at Wembley.
— Test Match Special (@bbctms) July 14, 2019
He saw @EnglandRugby win the 2003 World Cup in Sydney.
Will he make it the hattrick at @HomeOfCricket today? pic.twitter.com/ys2wKQuwBlJohn Ayling saw @England win the 1966 World Cup at Wembley.
— Test Match Special (@bbctms) July 14, 2019
He saw @EnglandRugby win the 2003 World Cup in Sydney.
Will he make it the hattrick at @HomeOfCricket today? pic.twitter.com/ys2wKQuwBl
ஆம் ஜான் ஐலிங் என்ற அந்த தாத்தா 1966ஆம் ஆண்டு ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியையும், 2003ஆம் ஆண்டு ரஃபி உலகக்கோப்பை இறுதிப்போட்யையும் நேரில் சென்று பார்த்துள்ளார். அந்த இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது என்பதுதான் ஆச்சர்யம்.
இதைக் குறிப்பிட்டு நேற்றைய போட்டியில் இவர் ஹாட்ரிக் அடிப்பாரா என்று அந்த ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அவர்கள் சொன்னதைப் போன்று நேற்றையப் போட்டியிலும் இங்கிலாந்து அணி இறுதி நிமிடத்தில் கோப்பையை வென்று இந்த புதிய ஜோசியத்தை உண்மையாக்கியுள்ளது.