உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 39 வது லீக் போட்டி சேஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நேற்று நடைபெற்றது. இதில் இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற மே.தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் கருணரத்னே மற்றும் குசால் பெரெரா ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தினை கொடுத்தனர். 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கருணரத்னே, தனது விக்கெட்டை ஹொல்டெரிடம் இழந்தார்.
அதன் பின் களமிறங்கிய அவிஸ்கா ஃபெர்னண்டோ சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்தினார். அவர், 103 பந்துகளில் 104 ரன்களை விளாசினார்.
இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்க்கு 336 ரன்களை சேர்த்தது. இலங்கை அணி சார்பில் ஃபெர்னண்டோ 104, குசால் பெரெரா 64, திரிமன்னெ 45 ரன்களை சேர்த்தனர். மே.தீவுகள் சார்பில் காட்ரெல் 2விகெட்டுகளை எடுத்தார்.
339 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மே.தீவுகள் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மலிங்கா வீசிய 2 வது மற்றும் 3 வது ஓவரில் மே.தீவுகள் அணியின் நட்சத்திர வீரர்களான அம்ரிஸ், சாஸ் ஹோப் ஆகியோரின் விகெட்டுகளை பறிகொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அதிரடி ஆட்டகாரர் கெயிலும் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனை அடுத்து களமிறங்ய நிக்கோலஸ் பூரான் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்த தொடங்கினார். அவர் 103 பந்துகளில் 118 ரன்களை எடுத்து மேத்தியுஸிடம் விக்கெட்டை இழந்தார்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் மே.தீவுகள் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அந்த அணியில் பூரான் 118, அல்லென் 51 ரனகளை எடுத்தனர். இலங்கை அணி சார்பில் மலிங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் 23 ரன்கள் விதியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி சதம் அடித்த அவிஸ்கான்ஃபெர்னண்டோ ஆட்டனாயகனாகத் தேர்வு செய்யப்பட்டர்.