உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்புடன் இன்று பங்ளாதேஷை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இந்த போட்டியில் குறைந்தது 316 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடிக்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டுள்ளது.
புள்ளிப்பட்டியளில் 5ஆவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி, இறுதி லீக் போட்டியில் இன்று விளையாட உள்ளது. ஏற்கனவே அரையிறுதிகான அணிகள் உறுதியாகிவிட்ட நிலையில், 4ஆம் இடத்தை பிடிப்பதற்கு நியூஸிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிகழ்கிறது.
முன்னதாக, அரையிறுதி வாய்பை நியூசிலாந்து அணி உறுதிசெய்த நிலையிலும், இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 316 ரன்கள் விதியாசத்தில் வெற்றி பெற்றால், நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் 4ஆம் இடத்துக்கு முன்றே வாய்ப்புள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் கான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “பங்களாதேஷிற்க்கு எதிராக நாங்கள் 500 ரன்களை எடுப்போம். முடிந்த அளவு பங்களாதேஷை 50 ரன்களுக்குள் சுருட்ட முயற்சிப்போம்” என கூறினார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக, இங்கிலாந்து அடித்த 481 ரன்களே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாகும்.
மேலும், ஜிம்பாவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 399 ரன்கள் குவித்ததே, ஒரு நாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் என்றார்.
இன்று நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி 500 ரன்களை அடித்தால் உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை அடித்த அணி என்ற சாதனையை படைக்கும்.