ETV Bharat / sports

நான்காண்டு பகையை தீர்த்த இந்தியா; மண்ணை கவ்விய ஆஸ்திரேலியா! - ஆஸ்திரேலியா

லண்டன்: உலகக்கோப்பைத் தொடரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய அ
author img

By

Published : Jun 9, 2019, 11:28 PM IST

2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 14ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து விளையாடிய இந்திய அணி தவான், ரோஹித், கோலி ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 352 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான வார்னர் - கேப்டன் ஃபின்ச் இணை, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில், ஃபின்ச் 36 ரன்களில் ரன் அவுட்டாகி ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் - வார்னர் இணை இணைந்தது.

ஸ்டீவ் ஸ்மித்
ஃபின்ச் ரன் அவுட்டாகிய ஹர்திக்

இந்த இணை இந்திய அணியின் பந்துவீச்சை சோதித்தது. நிதானமாக ஆடிய வார்னர் ஒருநாள் போட்டிகளில் தனது 18ஆவது அரைசதத்தைக் கடந்தார். தொடர்ந்து ஆடியபோது சாஹலின் பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து கவாஜா களமிறங்கினார்.

வார்னர்
வார்னர்

இருவரும் இணைந்து ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 36 ஓவர்களில் ஆச்திரேலிய 200 ரன்களைக் கடக்க, பும்ரா வீசிய அடுத்த ஓவரில் கவாஜா 42 ரன்களுக்கு ஆட்டமிழிந்தார். இதனால் ஆட்டம் பரபரப்பானது. பின்னர் வந்த மேக்ஸ்வெல் இந்திய அணியின் பந்துவீச்சை அதிரடியாக ஆடி பந்தை அனைத்து திசைகளிலும் சிதறடிக்க, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 66 பந்துகளில் 118 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் புவி வீசிய பந்தில் ஸ்டீவ் ஸ்மித் 69 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஸ்டோனிஸ் ரன் ஏதும் எடுக்காமல் போல்டாகி வெளியேறினார்.

ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்

தொடர்ந்து அடுத்த ஓவரில் மேக்ஸ்வெல் வழக்கம்போல் சாஹல் பந்தில் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் இந்திய அணியின் கை ஓங்கியது. இதனையடுத்து வந்த அலெக்ஸ் கேரி அதிரடியில் மிரட்ட, ஆட்டம் மீண்டும் விறுவிறுப்பானது. கடைசி மூன்று ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 53 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் கடைசி மூன்று ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 316 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணியிடம் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடந்தது.

ஸ்டீவ் ஸ்மித்
புவி

இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய கேரி 55 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பாக புவி, பும்ரா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போட்டியில் அடைந்த வெற்றியால், 2015ஆம் ஆணு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடிக் கொடுத்துள்ளது.

Intro:Body:

 IND vs AUS

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.