ETV Bharat / sports

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதல்; முதல் வெற்றி யாருக்கு? - Kohli

சவுதம்டன் (southampton): உலகக்கோப்பை தொடரின் எட்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி விளையாடுகிறது.

உலகக்கோப்பை
author img

By

Published : Jun 5, 2019, 9:46 AM IST

2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா மே 30ஆம் தேதி தொடங்கியது. தொடர் தொடங்கியதிலிருந்து அனைத்து அணிகளும் இரண்டாம் போட்டியில் விளையாடிவரும் நிலையில் இந்திய அணி முதல் போட்டியிலேயே இன்னும் விளையாடாமல் இருந்தது.

ஹோட்டல் போறாய்ங்க... பெயிண்ட் பால் ஆட போறாய்ங்க... ஆனா கிரிக்கெட் மட்டும் ஆட மாட்றாய்ங்களே... எப்ப ராஜா போட்டியிலே பங்கேற்பிங்கனு ரசிகர்களே கொந்தளிச்சுட்டாங்களேனா பாத்துக்கோங்களேன்...!

உலகக்கோப்பை
இந்திய அணியினர் பெயிண்ட் பால் விளையாடியபோது

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்த அந்தநாள் வந்துவிட்டது. இந்திய அணி தனது முதல் போட்டியில் களமிறங்க ஆயத்தமாகிவிட்டது. இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளிடம் அடைந்த தோல்விக்கு பதில் கூறக் காத்திருக்கும் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து முதல் போட்டியில் ஆட வேண்டும்.

தென்னாப்பிரிக்க அணியில் ஆம்லா, ஸ்டெயின், லிங்கி நிகிடி ஆகியோர் காயம். ஸ்டெயின் தொடரைவிட்டு விலகியே விட்டார். அதனால் என்ன... இந்த நேரத்தில் புதுமுக வீரர்கள்தான் ஆக்ரோஷத்துடன் ஆடுவார்கள் என வரிந்துகட்டிநிற்கிறார் தென்னாபிரிக்க கேப்டன் டூ ப்ளஸிஸ்.

உலகக்கோப்பை
ஆம்லா - டி காக்

இந்திய அணிக்கு எதிரான போட்டியென்றால் போதும்... டி காக்கை கையிலேயே பிடிக்க முடியாது... ஒரு சதம் பார்சல் என தைரியமாக களமிறங்க காத்திருக்கிறார். கேப்டன் டூ ப்ளஸிஸ் பற்றி சொல்லவே வேண்டாம். தென்னாப்பிரிக்காவின் தோனி என்றே சொல்லலாம். தேவைக்கேற்ப அதிரடியிலும், ஆட்டத்தை கட்டமைப்பதிலும் கில்லாடி. மில்லர், மார்க்ரம் இருவரும் எப்போ ஆடுவார்கள்... எப்படி ஆடுவார்கள் என்றெல்லாம் எவராலும் கணிக்க முடியாது... ஆனால் ஆடுவார்கள்...!

உலகக்கோப்பை
மார்க்ரம்

வாண்டர் டூசன், டுமினி, கிறிஸ் மோரிஸ், பெலுக்வாயோ என நடுவரிசை வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக பேட்டை சுழற்றக் தயாராக உள்ளனர். பந்துவீச்சில் ரபாடா, தாஹிர், மோரிஸ், பிரிடோரியஸ் என தங்களை நிரூபிக்கக் காத்திருக்கிறார்கள் தென்னாப்பிரிக்க அணியினர்.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் தென்னாப்பிரிக்க அணியில் எவ்வளவு பெரிய பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் சரி... விளையாடிய இரண்டு உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் சதம் அடித்திருக்கிறேன் என கெத்தாக முன் நிற்கும் கோலி, அதிரடிக்கு தவான்... கட்டமைத்தபின் ருத்ர தாண்டம் ஆட ரோஹித் ஷர்மா என டாப் ஆர்டரைப் பார்க்க மிரட்டலாக இருந்தாலும் நான்கவாது இடத்தில் யார் இறங்கப் போகிறார்கள் என யோசிக்கையில்தான் இந்திய ரசிகர்களின் மனதிற்குள் பகீர் என்ற உணர்ச்சி ஏற்படுகிறது.

உலகக்கோப்பை
கோலி - ரபாடா

ராகுல், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் மூவரில் யார் களம் காணுவார்கள் என்ற கேள்விக்கு கோலிக்கு மட்டும்தான் விடை தெரியும். ஒவ்வொரு போட்டிக்கும் இந்திய ரசிகர்களின் நிலைமை இதுதான் என நினைக்கும்போது...!

உலகக்கோப்பை
ராகுல்

அதனையடுத்து தோனி, ஜாதவ், தங்கச்சுரங்கம் ஹர்திக் பாண்டியா என இந்திய அணி நடுவரிசை சிறந்த ஃபார்மை வெளிப்படுத்திவருகிறது. பந்துவீச்சில் பும்ரா என்ற சிங்கம் கர்ஜனைக்கு காத்திருந்தாலும், உடன் பந்துவீசப் போவது புவியா... ஷமியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவரும் ஆடினாலும் நன்றே...!

உலகக்கோப்பை
தோனி

குல்தீப், சாஹல் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களோடு விராட் களமிறங்கப் போகிறாரா... அல்லது ஒருவரை மட்டும் களமிறக்கப் போகிறாரா என்பதும் ஆட்டத்தின் தொடக்கத்தில்தான் தெரியும். ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரையில் பலம் வாய்ந்த அணிதான். ஆனால் எதிரணியினரை சரியாக அணுகாமல் இருந்தால் பாகிஸ்தானிடம் இங்கிலாந்திற்கு ஏற்பட்ட கதிதான்.

சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இப்போட்டியில் யார் முதல் வெற்றியைப் பதிவு செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.