2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், மழையின் காரணமாக தொடர்ந்து இரண்டு நாட்கள் போட்டிகள் நடத்தப்படாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது. ரத்து செய்யப்பட்டுள்ள போட்டிகளை வேறு நாட்களில் நடத்தப்பட வாய்ப்புள்ளதா? என ஐசிசியிடம் இணையதளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ரத்து செய்யப்பட்டுள்ள போட்டிகள் மீண்டும் மாற்று நாட்களில் நடத்தப்படுவது என்பது மிகவும் கடினமான ஒன்று.
மைதானத்தின் தன்மை, அணிகள் பயணம் செய்து தயாராவதற்கான நேரம், மைதான உதவியாளர்கள் நேரம், ஒளிபரப்பாளர்களின் நேரம், முக்கியமாக ரசிகர்கள் என பல்வேறு விஷயங்களையும் பார்க்க வேண்டியுள்ளது.
![பிரிஸ்டோல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3535830_bcci.jpg)
நாக் - அவுட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டால், நிச்சயம் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால் இந்த வருட உலகக்கோப்பை தொடர் மிக நெடியது. லீக் போட்டிகள் மட்டுமே 45 வரை நடைபெறும். அதனால் ரத்து செய்யப்பட்டுள்ள போட்டிகள் மாற்று நாட்களில் நடத்தப்படுவது என்பது இயலாத காரியம் எனக் கூறியுள்ளது.
இன்று நடைபெறும் உலகக்கோப்பைத் தொடரில் வலிமையான அணிகளான ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் விளையாடவுள்ளன.