ETV Bharat / sports

'இவர்கள் விக்கெட்டை வீழ்த்தினால் போதும் இந்தியாவை வெல்லலாம்' - முன்னாள் ஜாம்பவான் வெட்டோரி - bumrah

உலகக் கோப்பையில் மிக முக்கியமான ஆட்டத்தில் ஆடவிருக்கும் தன் அணிக்கு சில அறிவுரைகளை முன்னாள் நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் டேனியல் வெட்டோரி வழங்கியுள்ளார்.

டேனியல் வெட்டோரி
author img

By

Published : Jul 8, 2019, 8:07 PM IST

உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான்கள் தங்கள் அணிகளுக்கு ஆலோசனைகளை கூறி வருகின்றனர்.

அந்த வரிசையில் நியூசிலாந்தின் நட்சத்திர வீரர் டேனியல் வெட்டோரி அரையிறுதியில் ஆடும் நியூசிலாந்து அணிக்கு சில ஆலோசனைகளைக் கூறி இருக்கிறார். அவர் கூறியவை பின் வருமாறு:

"எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் மோதியபோது அந்த அணிக்கு எதிராக மிகப் பெரிய இலக்கை நிர்ணயித்தது.

இது இந்திய அணியை வீழ்த்த நியூசிலாந்து அணிக்கு புது உத்வேகத்தையும் யுக்தியையும் கொடுத்துள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரையில் பும்ராவை மட்டுமே சமாளிக்க முடியாது.

இங்கிலாந்து உடனான போட்டியில் மற்ற எல்லா பந்துவீச்சாளர்களும் ரன்னை வாரி வழங்கும் போது பும்ரா மட்டுமே சிக்கனமாக பந்து வீசினார்.

bumrah
பும்ரா

ஆனால் இங்கிலாந்து வீரர்கள் பும்ராவை தவிர்த்து சாஹல்-குல்தீப் இணையையும் பாண்டியா மற்றும் சமியையும் அதிரடியாக தாக்கி பெரிய இலக்கை அடித்து இந்திய அணியைத் தோற்கடித்தனர்.

இந்திய அணியை வீழ்த்த வேண்டுமெனில் துல்லியமாகப் பந்து வீசி ரோஹித் மற்றும் கோலியின் விக்கெட்டை விரைவிலேயே வீழ்த்த வேண்டும். அவர்கள் பின் வரும் பலவீனமான நடு வரிசையை ஆட்டம் காணச் செய்தால் இந்திய அணியை எளிதாகத் தோற்கடிக்கலாம்.

இந்திய அணி ஆரம்பத்தில் மெதுவாக ஆடுவதாக அனைவரும் சொல்கிறார்கள். அதுதான் அவர்களின் மிகப்பெரிய பலமாகும். முன் பகுதியில் மெதுவாக ஆடி ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு இலக்கை நிர்ணயித்து வெல்கிறார்கள்.

rohith-kholi
ரோஹித்-கோலி

எனவே நியூசிலாந்தின் நட்சத்திர பந்து வீச்சாளர் போல்ட் மற்ற பந்து வீச்சாளர்களுக்குக் களத்தில் ஆலோசனைகள் வழங்கி குறைந்த ரன்னுக்குள் இந்திய அணியைச் சுருட்ட வேண்டும். நியூசிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தினால் இந்தியாவை எளிதில் வெல்லலாம்." எனக் கூறியுள்ளார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.