உலகக்கோப்பைத் தொடரில் நேற்று நடைபெற்ற 33ஆவது போட்டியில், நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொண்டது. வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் நியூசிலாந்து அணி தடுமாறியது. இறுதியில் நியூசி. அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை எடுத்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான், தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும், பின்னர் பாபர் அசாம், ஹபீஸ், சோகைல் உள்ளிட்டோரின் ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இப்போட்டியில், அபாரமாக ஆடிய பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், 127 பந்துகளில் 101* ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும், அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில்(68) 3000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் (69 இன்னிங்ஸ்) சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா (57 இன்னிங்ஸ்) தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவருகிறார்.
இதுதவிர, உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்களைக் குவித்த 25 வயதுக்குட்பட்ட வீரர்கள் பட்டியலில் அவர் ஐந்தாவது வீரராக இணைந்துள்ளார். நடப்பு தொடரில் பாபர் அசாம் 333 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரய்ன் லாரா, (1992 தொடர் - 333 ரன்கள்) சாதனையை சமன் செய்துள்ளார்.
-
Most runs scored by a batsman aged 24 or under in a single Men's @cricketworldcup.
— ICC (@ICC) June 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Babar Azam is in decent company on this list.#WeHaveWeWill pic.twitter.com/4aGlcnsStv
">Most runs scored by a batsman aged 24 or under in a single Men's @cricketworldcup.
— ICC (@ICC) June 26, 2019
Babar Azam is in decent company on this list.#WeHaveWeWill pic.twitter.com/4aGlcnsStvMost runs scored by a batsman aged 24 or under in a single Men's @cricketworldcup.
— ICC (@ICC) June 26, 2019
Babar Azam is in decent company on this list.#WeHaveWeWill pic.twitter.com/4aGlcnsStv
1996 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் 523 ரன்களைக் குவித்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர், இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்க வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் (2007 தொடர் - 372 ரன்கள்) , ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (1999 தொடர் - 354 ரன்கள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.