ETV Bharat / sports

சேவாக் சாதனையை முறியடிக்க வேண்டுமென யுவி நினைத்தார்: ரோஹித் ஷர்மா...! - ரோஹித் ஷர்மா சாதனை

மும்பை: நான் முதன்முதலாக இரட்டை சதம் அடித்தபோது, சேவாக்கின் 219 ரன்கள் என்ற தனிநபர் அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை முறியடிக்க வேண்டுமென யுவராஜ் நினைத்ததாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

yuvraj-singh-wanted-me-to-break-virender-sehwags-record-rohit-sharma-on-his-maiden-odi-double-ton

author img

By

Published : May 19, 2020, 3:47 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் ஓய்வெடுத்து வருகின்றனர். இதன் நடுவே ஒவ்வொரு வீரரும் இன்ஸ்டாகிராம் மூலம் மற்ற வீரர்களோடு உரையாடி வருகின்றனர். இந்த உரையாடல்கள் ரசிகர்களுக்கு பல நாஸ்டால்ஜியா சம்பவங்களை நினைவுபடுத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, அஸ்வின் இருவரும் நேற்று இன்ஸ்டாகிராமில் உரையாடினர். அதில் ரோஹித் ஷர்மா தனது முதல் இரட்டை சதத்தைப் பற்றி பேசினார். அப்போது அணி வீரர்கள் மனநிலை எப்படி இருந்தது என்பதையும் கூறினார்.

2013ஆம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் ஷர்மா தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார். அதுகுறித்து அவர் பேசுகையில், '' முதல் இரட்டை சதம் விளாசிவிட்டு நான் ட்ரெஸ்ஸிங் ரூம்மிற்குள் நுழைந்தபோது, ஒருவர் இன்னும் ஒரு ஓவர் கிடைத்திருந்தால் சேவாக்கின் தனிநபர் சாதனையை முறியடித்திருக்கலாம் என்றார்.

ட்ரெஸ்ஸிங் ரூமில் எனது இரட்டை சதத்திற்காக அதீத எதிர்பார்ப்பு இருந்தது. அதில் சிலர் நான் இன்னும் 10 முதல் 15 ரன்களை சேர்க்க வேண்டும் என நினைத்தனர். சரியாக சொன்னால் யுவராஜும், தவானும் சேவாக் சாதனையை நான் முறியடிக்க வேண்டும் என நினைத்தனர்'' என்றார்.

இதையடுத்து இலங்கை அணிக்கு எதிரான போட்டியின்போது ஒருநாள் போட்டிகளில் தனிநபர் எடுத்த அதிகபட்ச ரன் என்ற சாதனையை 264 ரன்கள் அடித்து ரோஹித் ஷர்மா படைத்தார். சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் ரோஹித் ஷர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லாக் டவுன் நாள்களிலும் பிசியாக இருக்கும் ஜெமீமா ரோட்ரிக்ஸ்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.