கரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ ஒத்திவைத்து.
இந்நிலையில் இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி தொடர் அடுத்த ஆண்டு ஜவனரி மாதம் 10ஆம் தேதி முதல் நடத்தவுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகளை மாநில கிரிக்கெட் வாரியங்கள் மேற்கொள்ளும்படியும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.
இதையடுத்து பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் 30 பேர் கொண்ட மாநில உத்தேச அணியை இன்று அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க விரும்புவதால், பஞ்சாப் கிரிக்கெட் வாரியத்தை அவர் அணுகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் யுவராஜ், பிசிசிஐயின் அனுமதியை மீறி கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற டி10 தொடரில் பங்கேற்றதால், அவரை சயீத் முஷ்டாக் அலி தொடரில் விளையாட பிசிசிஐ அனுமதிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பஞ்சாப் உத்தேச அணி:
மந்தீப் சிங், யுவராஜ் சிங், அபிஷேக் சர்மா, சலில் அரோரா, கீதன்ஷ் கெரா, ராமந்தீப் சிங், சன்விர் சிங், கரன் கைலா, ராகுல் சர்மா, கிருஷன் அலாங், சந்தீப் சர்மா, அர்ஷ்தீப் சிங், இக்ஜாட் சிங், நமன் திர், அபிஷேக் குப்தா, ஹிமான்ஷு சத்யவான், குர்கீரத் சிங், அன்மொல்ப்ரீட் சிங், பிரப்சிம்ரன் சிங்,நெஹால் வதேரா, அப்மோல் மல்ஹோத்ரா, ஆரூஷ் சப்ஹர்வால், அபினவ் சர்மா, ஹர்ப்ரீட், மயங்க் மார்கண்டே, பல்தேஜ் சிங், சித்தார்த் கவுல், பரிந்தர் சரண், குர்னூர் சிங், ஹர்ஜாஸ், அபிஜித் கார்க், குன்வர் பதாக்.
இதையும் படிங்க: ஐசிசி டெஸ்ட் தரவரிசை: கோலி இரண்டாவது இடம்