இன்ஸ்டாகிராமில் ரோஹித் ஷர்மாவுடன் நேரலையில் உரையாடியபோது, குறிப்பிட்ட ஒரு சாதிப் பிரிவு மக்களை குறிக்கும் வார்த்தையைப் பயன்படுத்தி இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் சாஹலை யுவராஜ் சிங் பேசினார். இது மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. சில மாநிலங்களில் யுவராஜ் சிங் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங் வருத்தும் தெரிவித்துள்ளார். அதில், ''நாட்டு மக்களிடையே நான் சாதி, மதம், இனம், மொழி என எவ்வித பாகுபாடும் காட்டியதில்லை. ஒவ்வொரு மனிதருக்கும் சுயமரியாதை உள்ளது. அதனை நான் ஏற்கிறேன். நான் ரோஹித் ஷர்மாவுடன் பேசியது தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. எனது பேச்சு யாரையும் காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.