ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள், தங்களது நேரத்தை சமூக வலைதளங்களில் அதிகம் செலவழித்துவருகின்றனர். அந்தவகையில், நட்சத்திர ஆல்ரவுண்டரான ஜடேஜா தனது வழக்கமான ஸ்டைலில் வாள் சுற்றிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
இது குறித்து அவர், ஒரு வாள் தன் பிரகாசத்தை இழக்கலாம். ஆனால் தன் மாஸ்டருக்குக் கீழ்ப்படியாமல் இருக்காது என பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, இதைப் பார்த்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், உங்கள் வீட்டுப் புற்களை வெட்ட கத்திரி தேவைப்படும் போல ராக்ஸ்டார் என கமெண்ட் அடித்தார்.
![Ravindra Jadeja shows off his famed swordsmanship skills](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6772999_j.jpg)
இதற்கு ஜடேஜா, ஆமாம், ஆனால் எனக்குப் புற்களை வெட்டுவதற்குத் தெரியாது என பதிலளித்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஐபிஎல் சீசனில் விளம்பரம் எடுக்கும் போது, தனது பேட்டை வாள் போன்று சுழற்றிய வீடியோவை பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'சச்சினை அவுட் செய்வது மிகவும் கடினம்; அவரே தவறு செய்து அவுட்டானால் தான் உண்டு' - கிளார்க்