ETV Bharat / sports

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது விமர்சனம்: அக்தருக்கு யூனுஸ் ஆதரவு! - பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அக்தர்

லாகூர்: மேட்ச் ஃபிக்சிங் விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும், அதன் ஆலோசகர் ரிஸ்வியையும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் விமர்சித்த விவகாரத்தில், யூனுஸ் கான் அக்தருக்கு ஆதரவளித்துள்ளார்.

younus-khan-backs-shoaib-akhtar-for-speaking-bitter-truth-about-pcb

author img

By

Published : May 1, 2020, 3:14 PM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி மேட்ச் ஃபிக்சிங் விவகாரத்தில் சிக்கி வருகின்றனர். சமீபத்தில் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதால், மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், '' மேட்ச் ஃபிசிங்கை ஏன் கிரிமினல் குற்றமாக மாற்றக் கூடாது? மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபடுவோருக்கு சிறைத் தண்டனை வழங்குவதோடு, குற்றவாளிகளின் சொத்தையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தவறு செய்பவர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கும்.

பிசிபி (பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம்) நிர்வாகிகளும், ஆலோசகர் ரிஸ்வியும் திறமையற்றவர்களாக இருக்கிறீர்கள். ஏன் இதுவரை மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபடுவோருக்காக சட்டம் இயற்றப்படாமல் உள்ளது'' என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பாகவும், ரிஸ்வியின் தரப்பிலிருந்தும், யாரை பற்றி விமர்சித்தாலும் அக்தர் வார்த்தைகள் சரியாக பயன்படுத்தவேண்டும் என பதில் கொடுக்கப்பட்டது. அக்தருக்கு எதிராக நீதிமன்றத்தில் ரிஸ்வி அவதூறு வழக்கையும் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் யூனுஸ் கான் அக்தரின் கருத்துக்கு ஆதரவளித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்ட ட்வீட்டில், '' அக்தர் பேசியது கசப்பான உண்மை. வீரர்களின் முன்னேற்றத்திற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அக்தரின் கருத்துக்களை நிதானமாக பரிசீலிக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உமர் அக்மலும் முட்டாள்களின் பட்டியலில் இணைத்துவிட்டார் - ரமீஸ் ராஜா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.