ETV Bharat / sports

சச்சினை மட்டுமே சார்ந்து இருந்த இந்திய அணி... 1996 உலகக் கோப்பை ரீவைண்ட்! - Aravinda de Silva

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், சச்சின் ஆட்டமிழந்தால், இந்திய அணி தோல்வி அடைந்துவிடும் என்ற பிம்பம் இந்தப் போட்டியில் இருந்துதான் தொடங்கியது. இந்தியயா வெற்றிபெற சச்சினின் பங்களிப்பு மட்டுமில்லாமல் அணியில் உள்ள ஒட்டுமொத்த வீரர்களின் பங்களிப்பும் அவசியம் என்பது இந்திய அணிக்கும் , ரசிகர்களுக்கும் பின்நாட்களில்தான் புரியவந்தது.

worldcup-rewind-glimpse-of-1996wc-rewind

author img

By

Published : Mar 13, 2020, 5:02 PM IST

இங்கிலாந்தில் கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கும், 1996இல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கும் சின்ன வித்தியாசம்தான் உள்ளது. 2019இல் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 240 ரன்கள்தான் இலக்கு என்றபோதிலும் இந்திய அணி ஐந்து ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளும், 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளும் பின் 22.4 ஓவர்களில் 71 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளையும் இழந்தது. இருந்தாலும் இந்திய ரசிகர்கள் யாரும் டி.வியை ஆஃப் செய்யவில்லை. ஹாட் ஸ்டாரில் 27 லட்ச இந்திய ரசிகர்களும் இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடும் போட்டியை பார்த்தனர்.

ஆனால் 1990களில் அப்படியான நிலை இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் அமைந்ததில்லை. சச்சின் ஆட்டமிழந்தால் இந்திய அணி தோல்வியடைந்துவிடும் என்று ரசிகர்கள் டிவியை ஆஃப் செய்துவிடுவர். சச்சினின் ஆட்டத்தை மட்டுமே சார்ந்து இந்திய அணியும், கோடிக்கணக்கான ரிசகர்களும் இருந்தனர், என்பதற்கு 1996 உலகக் கோப்பை தொடர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

1996 உலகக்கோப்பை அரையிறுதி
1996 உலகக்கோப்பை அரையிறுதி

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இரண்டாவது முறையாக நடைபெற்ற அந்தத் தொடரில் சச்சின் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தி இந்திய அணியை அரை இறுதிச் சுற்றுக்கு அழைத்துச்சென்றார். ஈடன் கார்டன் கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா, இலங்கையுடன் மோதியது.

இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு சென்று 1983க்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்போடு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர். மேலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் டிவிக்கு முன்பு கூடினர். முன்னதாக, இந்தத் தொடரின் லீக் சுற்றில் இந்தியா இலங்கையிடம் அடைந்த தோல்விக்கு, இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சச்சினைத் தவிர மற்ற இந்திய வீரர்கள் யாரும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற பொறுப்போடு விளையாடவில்லை. 252 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் நவ்ஜோத் சிங் சித்து மூன்று ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினாலும், மறுமுணையில் சச்சின் டெண்டுல்கர் இலங்கை அணியின் மிரட்டலான பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு அரை சதத்தை விளாசினார்.

சச்சின் ஆட்டமிழந்தபோது...
சச்சின் ஆட்டமிழந்தபோது...

22.2 ஓவரில் இந்திய அணி ஒருவிக்கெட் இழப்புக்கு 98 ரன்களை எடுத்திருந்தது. சச்சினும் 9 பவுண்டரிகள் உட்பட 68 ரன்களை சேர்த்து களத்தில் செட்டில் ஆகியிருந்தார். இதனால், ஆட்டம் இந்தியாவின் பக்கம் நகர்ந்துக் கொண்டிருந்தபோது அந்த ஓவரின் அடுத்தப் பந்திலேயே இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. ஜெயசூர்யாவின் பந்துவீச்சில் சச்சின் எதிர்பாராத விதமாக ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் அசாரூதின் (0), அஜய் ஜடேஜா (0), ஜவகல் ஸ்ரீநாத் (6), நயன் மோங்கியா (1), ஆசிஷ் கபூர் (0) ஆகியோர் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். இந்திய அணியின் ஸ்கோரோ 34.1 ஓவரில் எட்டு விக்கெட்டுக்கு 120 ரன்களாக மட்டுமே இருந்தது. குறிப்பாக சச்சின் ஆட்டமிழந்த பின் இந்திய அணி 11 ஓவர்களில் 22 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

மைதானத்தில் தீ வைத்த ரசிகர்கள்
மைதானத்தில் தீ வைத்த ரசிகர்கள்

இந்திய அணியின் மோசமான ஆட்டத்தை பார்த்து பொறுத்தக்கொள்ள முடியாத ரசிகர்கள் மைதானத்தின் இருக்கைகளை தீ வைத்து எறித்தும், மைதானத்தில் குப்பைகளை வீசியும் தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தினர். இந்த பரபரப்பான சூழலால் ஆட்டத்தை கைவிடுவதாக போட்டி நடுவர் கிளைவ் லாயிட் அறிவித்தார். அதுமட்டுமின்றி 15.5 ஓவர்களில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு 132 ரன்களை எடுப்பது கடினம் என்பதால் இலங்கை அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால், மிகவும் மனவேதனையுடன் களத்தில் பேட்டிங் செய்துகொண்டிருந்த இந்திய வீரர் வினாத் காம்ப்ளி கண்ணீருடன் பெவிலியனுக்கு திரும்பினார். இந்திய வீரர்களின் சொதப்பலான பேட்டிங்கும், ரசிகர்களின் இந்த மோசமான நடவடிக்கையும் அரங்கேறி இன்றோடு 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

மைதானத்தில் தீ வைத்த ரசிகர்கள்
மைதானத்தில் தீ வைத்த ரசிகர்கள்

ஒருவேளை இந்தப் போட்டியில், மற்ற இந்திய அணி வீரர்களும் பொறுப்புடன் ஆடியிருந்தால், சச்சினின் கனவு மட்டுமின்றி கோடிக்கணக்கான ரசிகர்களின் உலகக் கோப்பை கனவும் 2011ஆம் ஆண்டிற்கு முன் 1996இல் நிகழ்ந்திருக்குமோ என்னவோ. ஒட்டுமொத்தத்தில், கிரிக்கெட் போட்டிகளில், சச்சின் ஆட்டமிழந்தால், இந்திய அணி தோல்வி அடைந்துவிடும் என்ற பிம்பம் இந்தப் போட்டியில் இருந்துதான் தொடங்கியது. இந்தியா வெற்றிபெற சச்சினின் பங்களிப்பு மட்டுமின்றி அணியில் உள்ள ஒட்டுமொத்த வீரர்களின் பங்களிப்பும் அவசியம் என்பது இந்திய அணிக்கும் , ரசிகர்களுக்கும் பின்நாட்களில்தான் புரியவந்தது.

இதையும் படிங்க: நாத்திகர்களுக்கும் பிடித்த கடவுள் 'சச்சின் டெண்டுல்கர்!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.