ETV Bharat / sports

#WorldTestChampionship: 8 அணிகள் 212 புள்ளிகள்... இந்தியா மட்டும் 240 புள்ளிகள்...

author img

By

Published : Oct 22, 2019, 5:57 PM IST

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

India

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று ஒயிட் வாஷ் செய்தது. இதன் மூலம், இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 11 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது. ஐசிசி அறிமுகப்படுத்திய ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் இந்தத் தொடர்கள் நடைபெற்று வருகிறது.

தரவரிசைப் பட்டியலில் உள்ள ஒன்பது அணிகள் தலா ஆறு டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகின்றன. அதில், மூன்று தொடர்கள் அவர்களது சொந்த மண்ணிலும், மூன்று தொடர்கள் அந்நிய மண்ணிலும் நடைபெறுகிறது. ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் வழங்கப்படும். அந்தத் தொடரில் மொத்தம் எத்தனை போட்டிகள் உள்ளதோ அதற்கு ஏற்றார்போல் புள்ளிகள் பிரிக்கப்பட்டு அணிகளுக்கு வழங்கப்படும்.

India
சாம்பியன்

அதனடிப்படையில் தரவரிசைப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில், இந்திய அணி ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று 120 புள்ளிகளை பெற்றது. தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணி அபார வெற்றிபெற்று 120 புள்ளிகளை எடுத்துள்ளது.

India
இந்தியா

இதனால், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றிபெற்று 240 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து, இலங்கை அணி தலா 60 புள்ளிகளுடன் இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேபோல, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் 56 புள்ளிகளுடன் நான்காவது,ஐந்தாவது இடத்தில் உள்ளன.

இவர்களைத் தவிர வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இன்னும் கணக்கைத் தொடங்காமல் உள்ளது. இதில், ஆச்சரியம் என்னவென்றால் இப்பட்டியலில் உள்ள மற்ற எட்டு அணிகள் மொத்தமாக எடுத்த புள்ளிகளை விட இந்திய அணி 28 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளது. மற்ற எட்டு அணிகளும் சேர்ந்து மொத்தமாக எடுத்த புள்ளிகள் 212தான். ஆனால், இந்திய அணி மட்டும் 240 புள்ளிகள் எடுத்து அசத்தியுள்ளது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள்

அணிகள் விளையாடிய போட்டிகள் வெற்றிகள் தோல்விகள் டிரா புள்ளிகள்
இந்தியா 5 5 0 0 240
நியூசிலாந்து 2 1 1 0 60
இலங்கை 2 1 1 0 60
ஆஸ்திரேலியா 5 2 2 1 56
இங்கிலாந்து 5 2 2 1 56
வெஸ்ட் இண்டீஸ் 2 0 2 0 0
தென் ஆப்பிரிக்கா 3 0 3 0 0
பாகிஸ்தான் 0 0 0 0 0
வங்கதேசம் 0 0 0 0 0

இந்திய அணிக்கும் இரண்டாவது இடத்திலிருக்கும் நியூசிலாந்து அணிக்கும் 180 புள்ளிகள் வித்தியாசம் உள்ளன. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தினாலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெறும் தொடர், இந்திய அணிக்கு சவால் நிறைந்த தொடர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

India
புள்ளிகள் வழங்கும் முறை

இது ஒருபக்கம் இருந்தாலும், இந்திய அணி பெற்ற புள்ளிகளைக் கணக்கிட்டால் நிச்சயம் இறுதிப் போட்டிக்குள் நுழையும் எனத் தெரிகிறது. ஆனால், இதே ஃபார்மை கோலி ஆண்ட் கோ தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/cricket/cricket-top-news/world-test-championship-india-strengthen-position-at-top-of-points-table/na20191022133717445

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.