ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இப்போட்டி தொடங்கவுதற்கு முன்பும், போட்டி முடிந்த பின்பும் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி லைவ் பர்ஃபாமென்ஸ் செய்யவுள்ளார். அதற்காக மைதானத்துக்கு இன்று வருகை தந்த அவர் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியைச் சந்தித்து பேசினார்.
அதில், நாளை இறுதிப் போட்டியில் யார் யார் விளையாடுவார்கள் என அவர் கேள்வி கேட்டார். அதற்கு இந்திய வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி, ஐசிசியின் விதிமுறைப்படி டாஸ் போடுவதற்கு முன் அணி விவரங்களைத் தெரிவிக்கக் கூடாது என பதலளித்தார்.
-
Not even @katyperry is allowed to know the India team for tomorrow 😂 #T20WorldCup | #FILLTHEMCG pic.twitter.com/b3RQyJG5Wz
— T20 World Cup (@T20WorldCup) March 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Not even @katyperry is allowed to know the India team for tomorrow 😂 #T20WorldCup | #FILLTHEMCG pic.twitter.com/b3RQyJG5Wz
— T20 World Cup (@T20WorldCup) March 7, 2020Not even @katyperry is allowed to know the India team for tomorrow 😂 #T20WorldCup | #FILLTHEMCG pic.twitter.com/b3RQyJG5Wz
— T20 World Cup (@T20WorldCup) March 7, 2020
மற்றொரு வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ், 11 பேர் கொண்ட அணி விவரங்கள் தெரிய வேண்டுமென்றால், நீங்கள் எனக்கு நாளை கால் செய்யுங்கள் என கேட்டி பெர்ரிக்கு கூலாக பதிலளித்துள்ளார். கேட்டி பெர்ரிக்கும் நாளை போட்டியில் இந்திய அணியின் பிளெயிங் 11 தெரியவில்லை என ஐசிசி டி20 உலகக் கோப்பை ட்விட்டர் பக்கம் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இப்போட்டி நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 12:30 மணிக்கு தொடங்கவுள்ளது. இப்போட்டிக்காக மொத்தம் 70 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது.
இதையும் படிங்க: மகளிர் டி20 இறுதிப் போட்டிகளும் ஆஸி.யின் ஆதிக்கமும்...!