2019 ஆம் ஆண்டு கிரிக்கெட்டை பொறுத்தவரையில், பல்வேறு சாதனைகளும், சர்ச்சைகளும் அரேங்கேறியிருந்தன. குறிப்பாக, கடந்த ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அஸ்வின் மான்கட் முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பட்லரை அவுட் செய்தது பெரும் சர்ச்சையானது.
கிரிக்கெட் விதிமுறைப்படியே அஸ்வின் மான்கட் முறையில் அவுட் செய்திருந்தாலும் அவரது நடவடிக்கையை பலரும் விமர்சத்தினர். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அவர் டெல்லி அணிக்காக விளையாடவுள்ளார்.
இந்நிலையில், ரசிகர் ஒருவர் அஸ்வினிடம் ட்விட்டரில் நீங்கள் நடைபெறவுள்ள ஐபிஎல் சீசனில், யாரை மான்கட் முறையில் அவுட் செய்வீர்கள் என கேள்வி கேட்டார். அதற்கு அஸ்வின், க்ரீஸை விட்டு யார் வெளியே சென்றாலும் அவர்களை நிச்சயம் மான்கட் முறையில் அவுட் செய்வேன் என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார்.
இதையடுத்து, அஸ்வினின் இந்தப் பதிவுக்கு பதிலடி தரும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், 2020 ஐபிஎல் தொடரில் இந்த (மான்கட்) பந்தை யார் பயன்படுத்துவார்கள் என்பதை சொல்லித் தெரிய தேவையில்லை என குறிப்பிட்டிருந்தது.
-
Might well be a good collection for the non strikers who meander along 😂😂👍🏻. Good banter nevertheless ☺️ wish you all a happy 2020. 🔥 https://t.co/fqD9WOCHTL
— Ashwin Ravichandran (@ashwinravi99) December 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Might well be a good collection for the non strikers who meander along 😂😂👍🏻. Good banter nevertheless ☺️ wish you all a happy 2020. 🔥 https://t.co/fqD9WOCHTL
— Ashwin Ravichandran (@ashwinravi99) December 31, 2019Might well be a good collection for the non strikers who meander along 😂😂👍🏻. Good banter nevertheless ☺️ wish you all a happy 2020. 🔥 https://t.co/fqD9WOCHTL
— Ashwin Ravichandran (@ashwinravi99) December 31, 2019
இதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த ட்வீட்டிற்கு அஸ்வின், களமிறங்கும் நான்-ஸ்ட்ரைக்கர்களுக்கு இது ஒரு நல்ல தொகுப்பாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், இந்த பதிவுகள் நல்ல ஜாலியாக இருந்தன. அனைவருக்கும் புத்தாண்டு தின நல்வாழ்த்துகள் எனப் பதிவிட்டிருந்தார். ஒருவேளை நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் இதற்கான பதிலடியை அவர் தருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுத்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள்!